SA20: ஹென்ரிச் கிளாசன் காட்டடி சதம்.. டி காக், பிரீட்ஸ்கீ அரைசதம்! 20 ஓவரில் 254 ரன்களை குவித்த டர்பன் அணி

Published : Feb 05, 2023, 11:07 PM IST
SA20: ஹென்ரிச் கிளாசன் காட்டடி சதம்.. டி காக், பிரீட்ஸ்கீ அரைசதம்! 20 ஓவரில் 254 ரன்களை குவித்த டர்பன் அணி

சுருக்கம்

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு எதிராக ஹென்ரிச் கிளாசன் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடிக்க, 20 ஓவரில் 254 ரன்களை குவித்த டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 255 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேபிடள்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. 

செஞ்சூரியனில் நடக்கும் போட்டியில், ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணியும் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் இன்று ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

6 பந்தில் 6 சிக்ஸர்கள்.. சீனியர் பவுலரை தெறிக்கவிட்ட இஃப்டிகார் அகமது..! வைரல் வீடியோ

பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், தியூனிஸ் டி பிருய்ன் (கேப்டன்), ரைலீ ரூசோ, காலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷம், சேனுரான் முத்துசாமி, மைகேல் பிரிட்டோரியஸ், ஏதன் பாஷ், டேரைன் துபாவிலான், ஜோஷூவா லிட்டில். 

டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

பென் மெக்டெர்மோட், குயிண்டன் டி காக் (கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்க், கீமோ பால், ஹென்ரிச் கிளாசன், வியான் முல்டர், ட்வைன் பிரிட்டோரியஸ், டேவிட் வில்லி, கேஷவ் மஹராஜ், ஜூனியர் டாலா, ரீஸ் டாப்ளி.

முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் பென் மெக்டெர்மோட் இணைந்து அடித்து ஆடி 6 ஓவரில் 76 ரன்களை குவித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டி காக் 20 பந்தில் 43 ரன்களையும், மெக்டெர்மோட் 24 பந்தில் 41 ரன்களையும் விளாசினர். 3ம் வரிசையில் இறங்கி பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி பவுலிங்கை அடித்து நொறுக்கிய ஹென்ரிச் கிளாசன் சதமடித்தார். 44 பந்தில் சதமடித்து அசத்தினார் கிளாசன்.

என் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவர்தான்..! ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

44 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்தார் கிளாசன். வில்லி(1), முல்டர்(9) ஏமாற்றமளித்தாலும், 6ம் வரிசையில் இறங்கிய பிரீட்ஸ்கி, கிளாசனுடன் இணைந்து அடித்து ஆடி 21 பந்தில் 46 ரன்களை விளாச, 20 ஓவரில் 254 ரன்களை குவித்த டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 255 ரன்கள் என்ற கடின இலக்கை பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!