தோனி - ரோஹித் - கோலி - ரெய்னா இடையே கடும் போட்டி!! முந்தப்போவது யார்..?

By karthikeyan VFirst Published Mar 16, 2019, 3:31 PM IST
Highlights

ஐபிஎல்லில் ரோஹித், தோனி, கோலி, ரெய்னா ஆகியோர் வெற்றிகரமான வீரர்களாக வலம்வருகின்றனர். இவர்களில் தோனியும் ரோஹித்தும் வெற்றிகரமான வீரர்களாக மட்டுமல்லாமல் வெற்றிகரமாக கேப்டன்களாகவும் திகழ்கின்றனர். 
 

ஐபிஎல்லில் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

ஐபிஎல்லில் ரோஹித், தோனி, கோலி, ரெய்னா ஆகியோர் வெற்றிகரமான வீரர்களாக வலம்வருகின்றனர். இவர்களில் தோனியும் ரோஹித்தும் வெற்றிகரமான வீரர்களாக மட்டுமல்லாமல் வெற்றிகரமாக கேப்டன்களாகவும் திகழ்கின்றனர். 

ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ரெய்னா முதலிடத்திலும் கோலி இரண்டாமிடத்திலும் ரோஹித் சர்மா மூன்றாமிடத்திலும் உள்ளனர். காம்பீர், உத்தப்பா, தவானுக்கு அடுத்ததாக தோனி 7ம் இடத்தில் உள்ளார். 8,9,10 ஆகிய இடங்களில் முறையே வார்னர், கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர். 

ஐபிஎல்லில் 292 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக கிறிஸ் கெய்ல் திகழ்கிறார். இவருக்கு அடுத்தபடியாக 186 சிக்ஸர்களுடன் தோனி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 

தோனி 186 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ரெய்னா 185 சிக்ஸர்களும் ரோஹித் 184 சிக்ஸர்களும் கோலி 178 சிக்ஸர்களும் விளாசியுள்ளனர். இந்நிலையில், இந்த சீசனில் நால்வருமே 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை உறுதியாக எட்டிவிடுவர். ஆனால் யார் முதலில் எட்டுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. முந்தப்போவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!