ஆல்டைம் சிறந்த 11 வீரர்களை கொண்ட ஐபிஎல் அணி!! தெறிக்கவிடும் தொடக்க ஜோடி.. கேப்டன் யாருனு தெரியுமா..?

By karthikeyan VFirst Published Mar 16, 2019, 1:12 PM IST
Highlights

ஐபிஎல்லில் ரெய்னா, தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல், பிராவோ ஆகிய வீரர்கள் வெற்றிகரமான வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களை போன்ற சில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 
 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) ஆகிய அணிகள் தலா 2 முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ்(முன்பு டெல்லி டேர்டெவில்ஸ்), ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்த மூன்று அணிகளுமே இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே மற்றும் கோலி தலைமையிலான ஆர்சிபி ஆகிய அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல்லில் ரெய்னா, தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல், பிராவோ ஆகிய வீரர்கள் வெற்றிகரமான வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களை போன்ற சில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

ஐபிஎல் 12வது சீசன் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல்லில் ஆல்டைம் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அந்த அணியின் கேப்டனாக தோனியை தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக கெய்ல் மற்றும் ரோஹித் உள்ளனர். கோலி, டிவில்லியர்ஸ், ரெய்னா ஆகியோரை கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சு ஜோடியாக பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்துள்ளார். ஹர்பஜன் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் டிவில்லியர்ஸ் மற்றும் பிராவோவும் உள்ளனர்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணி:

கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், ரெய்னா, தோனி(கேப்டன்), பிராவோ, சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்பஜன் சிங்.

click me!