இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பர்.. இவரவிட சிறந்தவர் வேறு யாருமே இல்ல!! பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 16, 2019, 11:46 AM IST
Highlights

இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் உலக கோப்பைக்கான கதவு தினேஷ் கார்த்திக்கிற்கு சாத்தப்பட்டதாக கருதப்பட்டது. ரிஷப் பண்ட்டை பரிசோதிக்கும் விதமாக கடைசி 2 போட்டிகளில் ஆடவைக்கப்பட்டார். 
 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பை அணிக்கான 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். ஒன்றிரண்டு இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது. 

உலக கோப்பைக்கான அணிக்கு தேவைப்படும் வீரர்களில் ஒருவர் மாற்று விக்கெட் கீப்பர். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் தேவை. அந்த இடத்திற்கு அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டிற்கே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. 

தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ஆடியபோதும், அவர் சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் நிலையிலும், அவரைவிட ரிஷப் பண்ட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் ஆடிய ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பியதுடன் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. 

இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் உலக கோப்பைக்கான கதவு தினேஷ் கார்த்திக்கிற்கு சாத்தப்பட்டதாக கருதப்பட்டது. ரிஷப் பண்ட்டை பரிசோதிக்கும் விதமாக கடைசி 2 போட்டிகளில் ஆடவைக்கப்பட்டார். 

மொஹாலியில் நடந்த நான்காவது போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங் ஆகியவற்றை தவறவிட்டார் ரிஷப் பண்ட். பேட்ஸ்மேன் அடிக்கத் தவறிய பந்துகளையும் கூட தவறவிட்டு பவுண்டரிக்கு வழிவகுத்து கொடுத்தார். ஒரு விக்கெட் கீப்பர் இந்த லெட்சணத்தில் விக்கெட் கீப்பிங் செய்தால்,அது அணியின் வெற்றியை கடுமையாக பாதிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. 

இந்த உலக கோப்பைக்கு ஆடுவதற்கு அவர் தகுதி பெற்றுவிட்டாரா என்பது சந்தேகம்தான். பேட்டிங்கிலும் கவனத்தை ஈர்க்குமளவிற்கு ஒருநாள் போட்டிகளில் எதுவும் செய்யவில்லை. ரிஷப் பண்ட் சொதப்பியதால், தினேஷ் கார்த்திற்கான கதவு இன்னும் மூடப்படவில்லை என்றே கருதப்படுகிறது.

இவ்வாறு உலக கோப்பையில் மாற்று விக்கெட் கீப்பராக யார் அழைத்து செல்லப்படுவார் என்ற கேள்விக்கு இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் ரிஷப் பண்ட் சரியாக ஆடவில்லை. அது அவரை கடுமையாக பாதித்திருக்கும். எனவே ஐபிஎல்லில் டெல்லி அணியில் ஆடும் ரிஷப்பை, ஒரு பயிற்சியாளராக அவரது மனநிலையை மாற்றி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு சில வெற்றிகளை பெற்றுக்கொடுத்தாலே, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பியதை அனைவரும் மறந்துவிடுவார்கள். அதனால் தோனிக்கு மாற்று ரிஷப் பண்ட் மட்டும்தான். அவரைவிட சிறந்த மாற்று வேறு யாருமே இல்லை என்று பாண்டிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

click me!