சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்த தென்னாப்பிரிக்க மூத்த வீரர்

By karthikeyan VFirst Published Aug 9, 2019, 10:11 AM IST
Highlights

2004ம் ஆண்டு தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆம்லா, 2008ம் ஆண்டில் ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டார். 

தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரரான ஹாஷிம் ஆம்லா திடீரென நேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 

2004ம் ஆண்டு தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆம்லா, 2008ம் ஆண்டில் ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9282 ரன்களையும் 181 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8113 ரன்களையும் குவித்துள்ளார். 

எப்பேர்ப்பட்ட கடினமான கண்டிஷன்களிலும் இக்கட்டான சூழல்களிலும் பொறுமையாக நிலைத்து ஆடி ரன்களை குவிக்கும் வல்லமை பெற்றவர் ஆம்லா. தென்னாப்பிரிக்க அணிக்காக 15 ஆண்டுகள் ஆடியுள்ளார். நடந்து முடிந்த உலக கோப்பை தொடர் ஆம்லாவிற்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் சரியாக அமையவில்லை. 

தென்னாப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இந்நிலையில், திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஆம்லா. ஆம்லா டி20 லீக் தொடர்களிலும் ஆடியுள்ளார். ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரினிடாட் அணியிலும் ஆடியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஆம்லா ஓய்வு பெற்றுள்ளார். உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார். 
 

click me!