நான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் ஹிட்மேன் தான்..! ஓபனா ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பவுலர்

By karthikeyan VFirst Published Jun 6, 2021, 9:16 PM IST
Highlights

ரோஹித் சர்மா தான், தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
 

பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹசன் அலி. 26 வயதான ஹசன் அலி, 54 ஒருநாள் மற்றும் 36 டி20 போட்டிகளில் ஆடி மொத்தமாக 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஹசன் அலி பாகிஸ்தான் அணி ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் முக்கியமான அங்கம். பாகிஸ்தான் அணிக்காக முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், ஹசன் அலி தான் பந்துவீசியதிலேயே யார் கடினமான பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஹசன் அலி, நான் நிறைய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியிருக்கிறேன். அவர்களில் ரோஹித் சர்மா தான் பந்துவீச மிகக்கடினமான பேட்ஸ்மேன். ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைகளில் அபாரமாக ஆடினார். சாம்பியன்ஸ் டிராபி(2017) தொடரில் ரோஹித்துக்கு பந்துவீச எனக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதுவும் அவரது நாளாக இருந்திருந்தால், எனது பவுலிங்கை வெளுத்து கட்டியிருப்பார்.

ரோஹித் சர்மா மிக அபாரமான வீரர். மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை அடிக்க வல்லவர். பந்தின் லைனுக்கு வந்து, பந்தை மிக தாமதமாக ஆடுவார். பிக்-அப் ஷாட் ஆடுவது எளிதல்ல. அனைவராலும் அதை ஆடிவிடமுடியாது. ஆனால் ரோஹித் அபாரமாக ஆடுவார் என்றார் ஹசன் அலி.

2018 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா 111 ரன்களை குவித்தார். 2019 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்களை குவித்தார் ரோஹித் சர்மா. ஹசன் அலியின் பவுலிங்கில் 87 பந்தில் 109 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 95 ரன்களை ரோஹித் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!