பெரிய ஜாம்பவனாக இருந்தும் பயிற்சியாளர் ஆகாதது ஏன்..? கவாஸ்கர் விளக்கம்

By karthikeyan VFirst Published Jun 6, 2021, 9:11 PM IST
Highlights

தான் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தும் பயிற்சியாளர் ஆகாதது ஏன் என சுனில் கவாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்பட்டுவருகிறார். இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட், இந்திய அண்டர் 19, இந்தியா ஏ ஆகிய அணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்து பல இளம் திறமைசாலிகளை உருவாக்கியதுடன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இருந்துவருகிறார். இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளார்.

முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் எல்லாம் பயிற்சியாளர்களாக இருந்து இந்தியா, இந்தியா ஏ அணிகளை வழிநடத்தியுள்ளனர். ஆனால் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பயிற்சியாளராகவோ இருந்ததில்லை.

இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ள சுனில் கவாஸ்கர், நான் ஒரு பந்து கூட இடைவிடாமல் ஆட்டத்தின் அனைத்து பந்துகளையும் பார்க்கும் நபர் கிடையாது. நான் ஆடிய காலத்தில் கூட, அவுட்டாகிவிட்டால் சிறிது நேரம் மேட்ச் பார்த்துவிட்டு டிரெஸிங் ரூமிற்கு சென்று புத்தகம் படிப்பது, கடிதங்களுக்கு பதில் எழுதுவது ஆகிய பணிகளை செய்துவிட்டு மீண்டும் வந்து கொஞ்சம் பார்ப்பேன். ஒவ்வொரு பந்தையும் பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. பயிற்சியாளர் ஒவ்வொருந்த பந்தையும் பார்த்தாக வேண்டும். எனவே அதுகுறித்து நான் யோசித்துக்கூட பார்த்தது கிடையாது என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
 

click me!