
இந்தியன் பிரீமியர் லீக் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
மே 19 திங்கட்கிழமை லக்னோவில் உள்ளஅடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், யுஸ்வேந்திர சஹலின் சாதனையை ஹர்ஷல் முறியடித்துள்ளார்.
ஹர்ஷல் படேல் தனது மூன்றாவது ஓவரில் இந்த சாதனையை நிகழ்த்தினார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த எய்டன் மார்க்ரமை தனது 150வது விக்கெட்டாக வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார்.
இந்தப் போட்டியில் ஹர்ஷல் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் . இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் சஹலின் சாதனையை முந்தினார்.
இந்த மைல்கல்லை எட்ட ஹர்ஷலுக்கு 114 போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டன. அதே நேரத்தில் சல் 118 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எட்டினார்.
ஐபிஎல்லில் வேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது இடம் ஹர்ஷல் படேலுக்குக் கிடைத்துள்ளது. 105 போட்டிகளில் இந்த சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவுக்கு அடுத்தபடியாக ஹர்ஷல் உள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் வீரரான மலிங்கா, ஐபிஎல் போட்டிகளில் பிரபலமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர். யார்க்கர்களுக்கு பெயர் பெற்ற மலிங்கா ஆட்டத்தின் கடைசி பகுதியில் அபாரமாகப் பந்துவீசுபவராகத் திகழ்ந்தார்.
105 - லசித் மலிங்கா
114 -ஹர்ஷ் படேல்
118 - யுஸ்வேந்திர சாஹல்
122 - ரஷீத் கான்
124 – ஜஸ்பிரித் பும்ரா