ஆண்களுக்கு நாங்க எந்த வகையிலும் சளைச்சவங்க இல்ல.. பவுண்டரி லைனில் செம கேட்ச் பிடித்த சிங்கப்பெண்.. வீடியோ

By karthikeyan VFirst Published Nov 2, 2019, 5:09 PM IST
Highlights

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 
 

முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 50 ஓவரில் 225 ரன்கள் அடித்தது. 226 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய மகளிர் அணி, 224 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டாஃபின் டெய்லர் 94 ரன்கள் அடித்து அந்த அணி 225 ரன்களை எடுக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார். 94 ரன்கள் அடித்திருந்த அவர், இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் சதமடிக்கும் நிலையில் இருந்தார். சதத்தை ருசிக்கும் முனைப்பில், கடைசி பந்தை லாங் ஆனில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். 

கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்றுவிட்ட அந்த பந்தை லாங் ஆனில் ஃபீல்டிங் செய்த ஹர்மன்ப்ரீத் கவுர் செம டைமிங்கில் ஜம்ப் செய்து அபாரமாக கேட்ச் பிடித்தார். அந்த அபாரமான கேட்ச்சின் மூலம் டெய்லரின் சத ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டார் ஹர்மன்ப்ரீத். ஸ்டன்னிங் கேட்ச்சின் வீடியோ இதோ.. 

Here u go!!
Penultimate ball SIX and then Harmanpreet Stunner in last ball of the innings !! pic.twitter.com/nMoZbDPx1N

— மெரின் குமார் (@merin_kumar)
click me!