ரோஹித் தலைமையில் களமிறங்கும் இளம் படை.. முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Nov 2, 2019, 4:14 PM IST
Highlights

3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வங்கதேச அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. 
 

முதல் டி20 போட்டி வரும் 3ம் தேதி(நாளை) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த டி20 தொடரில் விராட் கோலி ஆடவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. 

இந்த தொடருக்கான இந்தியா அணி முழுக்க முழுக்க இளம் வீரர்களால் நிரம்பப்பெற்றுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு டி20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதன்மை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான் என்பதால் அவர் தான் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக இருப்பார். சஞ்சு சாம்சனை பேட்ஸ்மேனாகத்தான் அணியில் எடுத்துள்ளதாக ஏற்கனவே தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துவிட்டார். 

அதனால் ரிஷப் பண்ட் இருந்தாலும் சஞ்சு சாம்சனும் ஆடும் லெவனில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் இறங்குவார்கள். கோலி இல்லாததால் மூன்றாம் வரிசையில் கேஎல் ராகுலும் நான்காம் வரிசையில் சஞ்சு சாம்சனும் ஐந்தாம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இறங்க வாய்ப்புள்ளது. அதன்பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 

ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா மற்றும் க்ருணல் பாண்டியா ஆகிய இருவரும் இறங்குவார்கள். ஷிவம் துபே அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவர் எடுக்கப்படுவார். அந்த ஒருவர் ஷிவம் துபேவாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹரும் ஷர்துல் தாகூரும் ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் இந்திய அணி பேட்டிங் டெப்த்தில் கவனம் செலுத்துவதால், நன்றாக பேட்டிங் ஆட தெரிந்த தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் தான் எடுக்கப்படுவார்கள்.

முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்/ஷிவம் துபே, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.
 

click me!