PAK vs ENG: பரபரப்பான 4வது டி20யில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி..! 19வது ஓவரில் ஆட்டத்தை திருப்பிய ஹாரிஸ் ராஃப்

By karthikeyan VFirst Published Sep 26, 2022, 3:03 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகித்த நிலையில், 4வது டி20 போட்டி கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வில் ஜகஸ், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), டேவிட் வில்லி, லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்ளி.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஆசிஃப் அலி, உஸ்மான் காதிர், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், முகமது வாசிம்.

இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவ், விராட் கோலி அதிரடி அரைசதம்..! 3வது டி20யில் ஆஸி.,யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
 
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வானும் பாபர் அசாமும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவரில் 97 ரன்களை சேர்த்தனர். பாபர் அசாம் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

வழக்கம்போலவே ரிஸ்வான் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்த ரிஸ்வான், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 4 போட்டிகளில் 3 அரைசதங்களை விளாசினார் ரிஸ்வான்.  67 பந்துகளில் 88 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ரிஸ்வான் 88 ரன்கள் அடித்தும் கூட, 20 ஓவரில் 166 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி. 

167 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்களான ஃபிலிப் சால்ட்(8), அலெக்ஸ் ஹேல்ஸ் (5), வில் ஜாக்ஸ்(0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். பென் டக்கெட் (33), ஹாரி ப்ரூக் (34) மற்றும் கேப்டன் மொயின் அலி (29) ஆகிய மூவரும் நன்றாக ஆடினர். ஆனால் நல்ல தொடக்கம் கிடைத்தும் கூட அவர்களில் ஒருவர் கடைசி வரை நின்று போட்டியை முடித்து கொடுக்க தவறிவிட்டனர்.

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியிலும், முக்கியமான கட்டங்களிலும் விக்கெட்டை இழந்தது. ஆனால் லியாம் டாவ்சன் கடைசி நேரத்தில் காட்டடி அடித்து இங்கிலாந்துக்கு நம்பிக்கையையும் பாகிஸ்தானுக்கு பயத்தையும் காட்டினார். கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்து அணிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 19 வது ஓவரை வீசிய ஹாரிஸ் ராஃப், அந்த ஓவரின் 3வது பந்தில் லியாம் டாவ்சனை வீழ்த்தினார். 17 பந்தில் 34 ரன்களை விளாசி பாகிஸ்தானை அச்சுறுத்திய டாவ்சனை வீழ்த்தி ஹாரிஸ் ராஃப் ஆட்டத்தை தலைகீழாக திருப்பினார். அதே ஓவரில் ராஃப், ஆலி ஸ்டோனையும் வீழ்த்த, கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. கடைசி விக்கெட்டாக ரீஸ் டாப்ளியை முகமது வாசிம் கடைசி ஓவரில் வீழ்த்த, இங்கிலாந்து அணி 19.2 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-2 என தொடரை சமன் செய்தது.
 

click me!