ஹர்திக் பாண்டியா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், ஐபிஎல் பற்றியே எல்லோருமே பேசத் தொடங்கியுள்ளனர். ஐபிஎல் டிரேட், ஐபிஎல் ஏலம் என்று நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கது அணியை பலப்படுத்தும் வகையில் வீரர்களை தேர்வு செய்துள்ளனர். மேலும், கேப்டன்கள், பயிற்சியாளர்கள் என்று மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டும் ரோகித் அண்ட் கோலி – பிசிசிஐ நியூ பிளான்!
இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 1476 ரன்கள் குவித்துள்ளார். இதில், 4 அரைசதமும், அதிகபட்சமாக 91 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், 42 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆன மகளிர் அணி, பாதிக்கு பாதி கூட எடுக்காமல் 148 ரன்னுக்கு சுருண்ட பரிதாபம்!
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது 4 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. அதோடு, 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியா 31 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் எடுத்ததோடு 833 ரன்களும் குவித்துள்ளார். இதில் ஒரு முறை டிராபியை வென்றுள்ளது. இந்த நிலையில் தான் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ஹர்திக் பாண்டியா திரும்பியது அவருக்கு உற்சாகமாக இருந்தாலும், ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அதோடு, மும்பை இந்தியன்ஸ் அணியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டது.
லிட்ச்பீல்டு, ஹீலி தரமான சம்பவம் – ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவிப்பு!
அதன் பிறகு அவர் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகியதாகவும், ஐபிஎல் தொடரில் இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்திக் பாண்டியா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது உடல் தகுதியை மேம்படுத்தி ஐபிஎல் தொடரில் விளையாடியாக வேண்டும் என்பதற்காக தீவிரமாக உடற் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
மலைகளுக்கு நடுவில் மைதானம்; மழைக்கு வாய்ப்பில்லை, 5 நாட்களும் போட்டி சக்ஸஸ்புல்லா நடக்கும்!