இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஃபோப் லிட்ச்பீல்டு மற்றும் கேப்டன் அலீசா ஹீலியின் அதிரடியால் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை போட்டிய இந்திய மகளிர் அணியானது 3 ரன்களில் வெற்றியை கோட்டைவிட்டது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-0 என்று கைப்பற்றியது.
2021, 2023 ஆம் ஆண்டுகளில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா: 2024ல் எப்படி?
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி கேப்டன் அலீஸா ஹீலி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஃபோப் லிட்ச்பீல்டு மற்றும் அலீசா ஹீலி இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர்.
மலைகளுக்கு நடுவில் மைதானம்; மழைக்கு வாய்ப்பில்லை, 5 நாட்களும் போட்டி சக்ஸஸ்புல்லா நடக்கும்!
இவர்களது விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணி போராடியது. கடைசியாக தீப்தி சர்மா இவர்களது ஜோடியை பிரித்தார். ஹீலி 85 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 189 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த எலீசா பெர்ரி 16, மூனி 3, தஹிலா மெக்ராத் 0 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Mumbai Indians Captain: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகும் ஜஸ்ப்ரித் பும்ரா?
ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த லிட்ச்பீல்டு சதம் அடித்து அசத்தினார். அவர், 125 பந்துகளில் 16 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 119 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த அஷ்லெக் கார்ட்னர் 30 ரன்களும், அன்னபெல் சதர்லேண்ட் 23 ரன்களும் எடுக்கவே ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய மகளிர் அணியில் ஷ்ரேயங்கா பட்டீல் 3 விக்கெட்டும், அமன்ஜோத் கவுர் 2 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரேகர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.