நாளை நடக்க இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெறு நிலையில் அவரது பையை யாரோ ஒருவர் திருடிய சம்பவம் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியுடன் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஆதலால், இந்த போட்டி வார்னரின் மறக்க முடியாத போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து வார்னருக்கு ஃபேர்வெல் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Mumbai Indians Captain: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகும் ஜஸ்ப்ரித் பும்ரா?
ஆனால், அதற்கு முன்னதாக டேவிட் வார்னருக்கு மறக்க முடியாத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நாளை நடக்கும் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மெல்போர்னிலிருந்து சிட்னிக்கு சென்ற போது அவரது பை காணாமல் போய்விட்டது. அந்தப் பையில் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது அணியும் பச்சைநிற கேப் உள்ளது. அது ஆஸ்திரேலியா வீரர்களின் கௌரவமான ஒன்று. டெஸ்ட் போட்டிகளுக்கு என்று ஆஸி வீரர்கள் அணியும் பிரத்யேகமான கேப் அது.
IPL 2024 Fittest Players List: 2024ல் ஐபிஎல் தொடரில் ஃபிட்டான வீரர்கள் யார் யார்?
காணாமல் போன அந்த பையில் 2 பச்சை நிற கேப். அதில் ஒன்று அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான போது அவருக்கு வழங்கப்பட்ட கேப். அந்த கேப் உடன் தான் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று ஆசையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் அவரது பையை யாரோ திருடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என் லக்கேஜில் இருந்து என் பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார்கள். அந்த பையில் என்னுடைய குழந்தைகளுக்கு வாங்கிய பரிசுப் பொருட்களும் உள்ளது. அதில் நான் அணியும் பச்சை நிற கேப் உள்ளது. அது எனது வாழ்வில் மறக்க முடியாத உணர்வுபூர்மான ஒன்று. எனது கடைசி டெஸ்ட் போட்டியில் அதனை அணிந்து தான் விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யாரும் பார்த்திராத விராட் கோலியின் வீடியோ வைரல்!
உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டுமென்றால் என்னிடம் வேறொரு பை ஒன்று உள்ளது. அதனை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதுவரையில் வார்னர், 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 26 சதங்கள், 36 அரைசதங்கள் உள்பட 8651 ரன்கள் குவித்துள்ளார்.
ஹோம் மைதானத்தை மாற்றிய பஞ்சாப் கிங்ஸ் – ஹர்ஷல் படேலுக்கு ஸ்கெட்ச் போட்டது சரிதானோ?
Lionel Messi Jersey Number 10: லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அறிவித்த அர்ஜென்டினா!