Hardik Pandya: நானும் ரெடின்னு சொல்லாமல் செய்து காட்டும் ஹர்திக் பாண்டியா - வைரலாகும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Jan 9, 2024, 4:03 PM IST

ஆப்கான்ஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.


கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடியது. இதில், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 என்று டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

National Sports Awards 2023: அர்ஜூனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

Tap to resize

Latest Videos

இதில் எந்த தொடரையும் இழக்காமல் நாடு திரும்பியது. டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. மேலும், ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்து வரலாறு படைத்தது. தென் ஆப்பிரிக்கா தொடரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரில் முதலில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று கூறப்பட்டது.

நாட்டின் 2ஆவது உயரிய விருது: குடியரசுத் தலைவர் கையால் அர்ஜூனா விருது பெற்ற முகமது ஷமி!

ஆனால், காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் அவர் ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்றனர். ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

BCCI Annual Award: ஜனவரி 23ல் பிசிசிஐ விருது வழங்கும் விழா – யார் யாருக்கு விருது வழங்கப்படுகிறது?

இந்த நிலையில் தான் இன்னும் 3 மாதங்களுக்குள்ளாக தயாராகாவிட்டால் தனது கேப்டன் வாய்ப்பும் பறிபோய்விடும் என்று கருதிய ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்து தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறும் ருதுராஜ் கெய்க்வாட் – முதல் 2 போட்டியில் ஓய்வு!

இந்த ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து, வரும் ஜூன் 1 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா அணியில் இடம் பெற்றால், கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் எப்படியும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார். முதலில் ஐபிஎல் தொடரில் இடம் பெறும் ஹர்திக் பாண்டியா, அதன் பிறகு டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 18 சிக்ஸர்கள் தான், டி20 கிரிக்கெட்டில் முதல் வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா!

 

 

click me!