ஒரு கேப்டனாக தோனி, கோலி, ரோஹித்திடமிருந்து நான் எடுத்துக்கொள்ள விரும்பும் விஷயங்கள் இவைதான் - ஹர்திக் பாண்டியா

Published : Feb 01, 2022, 05:29 PM IST
ஒரு கேப்டனாக தோனி, கோலி, ரோஹித்திடமிருந்து நான் எடுத்துக்கொள்ள விரும்பும் விஷயங்கள் இவைதான் - ஹர்திக் பாண்டியா

சுருக்கம்

தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரின் கேப்டன்சியிலும் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா, அவர்களிடமிருந்து என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்படுத்த விரும்புகிறார் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மெகா ஏலம் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக 2 புதிய அணிகளும் தலா 3 வீரர்களை எடுத்துள்ளன.

லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.

லக்னோ அணியை கேஎல் ராகுலும், அகமதாபாத் அணியை ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளனர். ஹர்திக் பாண்டியா முதல் முறையாக கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்படவுள்ளார். 

இந்திய அணியில் தோனி மற்றும் கோலி ஆகியோரின் கேப்டன்சியிலும், ஐபிஎல்லில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள ஹர்திக் பாண்டியா, அவர்களிடமிருந்து கேப்டன்சியில் என்னென்ன நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தனது கேப்டன்சியில் செயல்படுத்தவுள்ளார் என்பதை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் லக்னோ அணியை தலைமையேற்று வழிநடத்துவதை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி குறித்து பேசியுள்ளார்.

தான் ஆடிய கேப்டன்களிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியா, விராட்கோலியிடமிருந்து ஆக்ரோஷம், எனர்ஜி ஆகிய விஷயங்களையும், தோனியிடமிருந்து நிதானத்தையும், ரோஹித்திடமிருந்து வீரர்களை சுயமாக முடிவெடுத்து அதை செயல்படுத்த அளிக்கும் சுதந்திரம் ஆகிய தன்மை என இவர்களிடமிருந்து இந்த மூன்றையும் கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் ஹர்திக்  பாண்டியா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs MI: மாஸ் கம்பேக் கொடுக்கும் தோனி?.. சிக்சர் மன்னனும் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Vaibhav Suryavanshi: ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை! மேக்ஸ்வெல் ரெக்கார்டு ஊதி தள்ளிய 15 வயதான இளம் வீரர் வைபவ்!