புஜாரா, ரஹானேவை ஒட்டுமொத்தமா தூக்க வேண்டாம்.. அதுக்கு பதிலா இப்படி பண்ணுங்க..! முன்னாள் வீரர் அதிரடி

Published : Feb 01, 2022, 04:31 PM IST
புஜாரா, ரஹானேவை ஒட்டுமொத்தமா தூக்க வேண்டாம்.. அதுக்கு பதிலா இப்படி பண்ணுங்க..! முன்னாள் வீரர் அதிரடி

சுருக்கம்

இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் எதிர்காலத்தை பற்றி முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.  

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான அஜிங்க்யா மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மிடில் ஆர்டரில் முக்கியமான வீரர்கள். ஆனால் அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டரில் அவர்களது சொதப்பலால் இந்திய அணி தோல்வியடைய நேர்கின்றது.

புஜாரா, ரஹானேவின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துவிடுகிறது. அண்மையில் கூட, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் ஆடி மொத்தமாகவே புஜாரா 124 ரன்களும், ரஹானே 136 ரன்களும் மட்டுமே அடித்தனர். 

இவ்வாறாக சீனியர் வீரர்களான புஜாராவும் ரஹானேவும் தொடர்ந்து சொதப்பிவரும் அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் அவர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

பிசிசிஐயின் வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் ஏ பிரிவில் (ரூ.5 கோடி) இடம்பெற்றுள்ள புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் பி பிரிவிற்கு பின் தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் எதிர்காலம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் நிகில் சோப்ரா, புஜாரா, ரஹானே, இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் சரியாக ஆடுவதில்லை. அவர்கள் ஊதிய ஒப்பந்தத்தில் கீழிறக்கப்படுவது, அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை டெஸ்ட்டில் ஆடவைக்கப்போகிறார்கள் என்பதை   பறைசாற்றுவதுதான். இந்திய அணிக்காக நிறைய பங்காற்றியுள்ள இவர்களை அணியிலிருந்து நீக்கிவிடாமல், அவர்களை ரிசர்வ் வீரர்களாக வைத்துக்கொண்டு தேவையானபோது மட்டும் ஆடவைக்கலாம். அவர்களுக்கு பிரதான ஆடும் லெவனில் இடம் கொடுக்காமல் பேக்கப் வீரர்களாக வைத்துக்கொள்ளலாம் என்று நிகில் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!