திலக் வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் போட்டியை முடித்து கொடுத்த ஹர்திக் பாண்டியா!

Published : Aug 09, 2023, 10:02 AM ISTUpdated : Aug 09, 2023, 10:03 AM IST
திலக் வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் போட்டியை முடித்து கொடுத்த ஹர்திக் பாண்டியா!

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் திலக் வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டியை முடித்து கொடுத்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையிலான 3ஆவது டி20 போட்டி கயானவில் உள்ள புரோவிடான்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி கைல் மேயர்ஸ் மற்றும் பிராண்டன் கிங் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். மேயர்ஸ் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரிகள் உள்பட 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

WI vs IND 3rd T20: வான வேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் – வின்னிங் ஷாட் அடித்து கொடுத்த ஹர்திக் பாண்டியா!

ஜான்சன் சார்லஸ் 12 ரன்களில் வெளியேறினார். நிக்கோலஸ் பூரன் 20 ரன்களில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து பொறுமையாக விளையாடிய பிராண்டன் கிங் 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பவல் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உள்பட 40 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

31ஆவது உலக பல்கலைக்கழக போட்டியில் 26 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பந்து வீச்சு தரப்பில் இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகேஷ் குமார் ஒரு விக்கெட்டும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதே போன்று தொடர்ந்து 2 போட்டிகளிலும் சொதப்பிய சுப்மன் கில் இந்தப் போட்டியிலும் சொதப்பினார். அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து வான வேடிக்கை காட்டினர்.

WI vs IND 3rd T20: இஷான் கிஷானை நீக்கிய இந்தியா: டி20 போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இதில், சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் தனது 14ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் இதுவரையில் 51 போட்டிகளில் விளையாடி 1762 ரன்கள் குவித்தார். இதில், 14 அரைசதம், 3 சதம், 162 பவுண்டரிகள், 101 சிக்ஸர்கள் அடங்கும்.

கடைசியாக இந்திய அணியின் வெற்றிக்கு 14 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இதில், திலக் வர்மா ஒரு ரன் எடுத்தால் டி20 போட்டியில் 2ஆவது அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்கும் நிலை இருந்தது. ஆனா, ஹர்திக் பாண்டியா பேட்டிங் ஆடினார். பின்னர் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். எனினும், அவர் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்திருந்தால் திலக் வர்மா ஒரு ரன் எடுத்து அரைசதம் அடித்திருப்பார்.

ஆஸ்திரேலியா அணியில் 4ஆவது இந்திய வீரர்: உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்ற தன்வீர் சங்கா!

ஆனால், அதற்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். எனினும், முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து வெற்றி தேடிக் கொடுத்தது பாராட்டுதலுக்குரியது என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது டி20 போட்டி நடக்கிறது. இதையடுத்து 13 ஆம் தேதி 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது. இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும். மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!