ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் லெவன்.. முரளிதரனே 12வது வீரர் தான்! ஆஸ்திரேலியரை கேப்டனாக நியமித்த பாஜி

By karthikeyan VFirst Published Dec 2, 2021, 3:29 PM IST
Highlights

ஹர்பஜன் சிங் ஆல்டைம் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் தனது ஆல்டைம் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். ஆல்டைம் டெஸ்ட் லெவனின் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் அலெஸ்டர் குக் மற்றும் இந்தியாவிற்காக 2 முச்சதங்களை அடித்த வீரேந்திர சேவாக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் காலங்காலமாக பேட்ஸ்மேன்கள் ஆடிவந்த மரபான அணுகுமுறையை மாற்றி, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடியவர் வீரேந்திர சேவாக். பயமற்ற கிரிக்கெட்டை ஆடிய சேவாக்கை, மாடர்ன் டே விவியன் ரிச்சர்ட்ஸ் என புகழ்ந்துள்ளார் ஹர்பஜன் சிங்.

3ம் வரிசை வீரராக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரரான வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவையும், 4ம் வரிசை வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த சாதனைக்கு சொந்தக்காரரான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

5ம் வரிசை வீரராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் மற்றும் வெற்றிகரமான கேப்டனான ஸ்டீவ் வாக்-ஐ தேர்வு செய்த ஹர்பஜன் சிங், அவரையே தனது ஆல்டைம் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். 

ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான ஜாக் காலிஸையும், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இலங்கையின் குமார் சங்கக்கராவையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ரிஸ்ட் ஸ்பின்னர் ஷேன் வார்னை தேர்வு செய்த ஹர்பஜன் சிங், ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை (800) வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரரான லெஜண்ட் ஸ்பின்னர் முத்தையா முரளிதரனுக்கே ஆடும் லெவனில் இடமளிக்காத ஹர்பஜன் சிங், அவரை 12வது வீரராக தேர்வு செய்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் டெஸ்ட் லெவன்:

அலெஸ்டர் குக், வீரேந்திர சேவாக், பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் வாக் (கேப்டன்), ஜாக் காலிஸ், குமார் சங்கக்கரா (விக்கெட் கீப்பர்), ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

12வது வீரர் - முத்தையா முரளிதரன்.
 

click me!