ஹேப்பி பெர்த்டே டு தோனி ! பிறந்த நாளையொட்டி தோனியை கௌரவப்படுத்திய ஐசிசி !!

Published : Jul 06, 2019, 11:34 PM IST
ஹேப்பி பெர்த்டே டு தோனி ! பிறந்த நாளையொட்டி தோனியை கௌரவப்படுத்திய ஐசிசி !!

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் பிறந்த நாளையொட்டி அவரை கௌரவப்படுத்தும் விதமாக  ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2004 ம் ஆண்டு இந்திய அணியில் இணைந்த மகேந்திர சிங் தோனி   2007 ம் ஆண்டு துவங்கி 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். தோனி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணி பல கோப்பைகளை வென்றுள்ளது. 

இதனால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார் தோனி. எதிர் அணியினரிடமும், சக வீரர்களிடமும் பழகும் விதம் காரணமாக பலரும் அவரை கூல் கேப்டன் என்றே பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தனது 38-வது பிறந்தநாளை  நாளை 07-ம் தேதி கொண்டாடுகிறார். இதையடுத்து தோனியைக் கவுரவப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை  ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில்,  இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய தோனி என்கிற தலைப்பில் உள்ள அந்த வீடியோவில் தோனியின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வீடியோவில் விராட் கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற பிரபல வீரர்கள் தோனியின் பங்களிப்பு குறித்து  பாராட்டிப் பேசி உள்ளார்கள்.

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?