என்னோட 12 வயசுலயே எங்க அப்பா இறந்துட்டாரு.. அன்னக்கி முடிவு பண்ணேன்.. கலங்கிய ஹனுமா விஹாரி

By karthikeyan VFirst Published Sep 1, 2019, 11:52 AM IST
Highlights

ரோஹித் - விஹாரி இருவரில் யார் அணியில் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விஹாரிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தனது திறமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்த ஹனுமா விஹாரி, முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 93 ரன்களில் அவுட்டாகி, 7 ரன்களில் சதத்தை தவறவிடார். இந்நிலையில், இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி தனது முதல் சதத்தை அடித்துவிட்டார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார் ஹனுமா விஹாரி. 

சீனியர் வீரரான ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த போதும் கூட, ஹனுமா விஹாரிக்குத்தான் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. அந்த வாய்ப்பை நழுவவிடாமல் அபாரமாக ஆடி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் ஹனுமா விஹாரி. 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹனுமா விஹாரி, சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக ஆடினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை இறுகப்பிடித்துவிட்டார். 

ரோஹித் - விஹாரி இருவரில் யார் அணியில் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விஹாரிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தனது திறமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்த ஹனுமா விஹாரி, முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 93 ரன்களில் அவுட்டாகி, 7 ரன்களில் சதத்தை தவறவிடார். இந்நிலையில், இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி தனது முதல் சதத்தை அடித்துவிட்டார். 

7வது விக்கெட்டுக்கு பிறகு ஹனுமா விஹாரி - இஷாந்த் சர்மா ஜோடியின் பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி 400 ரன்களை கடந்தது. ஹனுமா விஹாரி தனது முதல் சதத்தையும் இஷாந்த் சர்மா தனது முதல் அரைசதத்தையும் அடித்தனர். இவர்களது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. பும்ராவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்த ஹனுமா விஹாரி, இரண்டாம் நாள் ஆட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தனது முதல் சதத்தை இறந்துபோன தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். நான் 12 வயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்துவிட்டார். அன்றைக்கு முடிவு செய்தேன்.. நான் சர்வதேச போட்டிகளில் ஆடினால், எனது முதல் சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிப்பது என்று.. இது என் வாழ்வில் மிகவும் உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான தருணம். என் தந்தை எங்கிருந்தாலும் என்னை நினைத்து இப்போது பெருமைப்படுவார் என்று நம்புகிறேன் என்று உருக்கமாக பேசினார் ஹனுமா விஹாரி. 
 
click me!