இஷாந்த் சர்மாவா இதுனு வியக்குற அளவுக்கான பேட்டிங்.. இஷாந்தின் அதிரடி அரைசதத்தை செமயா கொண்டாடிய கேப்டன் கோலி.. வீடியோ

Published : Sep 01, 2019, 10:09 AM IST
இஷாந்த் சர்மாவா இதுனு வியக்குற அளவுக்கான பேட்டிங்.. இஷாந்தின் அதிரடி அரைசதத்தை செமயா கொண்டாடிய கேப்டன் கோலி.. வீடியோ

சுருக்கம்

முதல் இன்னிங்ஸில் அரைசதத்தை கடந்த நால்வரில் இஷாந்த் சர்மாவும் ஒருவர். மயன்க் அகர்வால், விராட் கோலி, ஹனுமா விஹாரி ஆகிய மூவரை தவிர, சிறப்பாக ஆடிய மற்றொரு வீரர் இஷாந்த் சர்மா. இஷாந்த் சர்மா 69 பந்துகளிலேயே அரைசதத்தை அடித்துவிட்டார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மாவின் முதல் அரைசதம். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. கடந்த 30ம் தேதி தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலி - மயன்க் அகர்வாலின் அரைசதத்தால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் களத்தில் நின்றனர். 

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விஹாரியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, தனது விக்கெட்டை இழந்துவிடாமல் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன், நிதானமாக ஆடினார். ஆனாலும் அவரால் நிலைக்கமுடியவில்லை. ஜடேஜா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, நேர்த்தியாக பேட்டிங் ஆடினார். ஒருமுனையில் இஷாந்த் சர்மா விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மறுமுனையில் ஹனுமா விஹாரி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய இஷாந்த் சர்மா, அரைசதம் அடித்தார். 80 பந்துகளில் 57 ரன்கள் அடித்து இஷாந்த் சர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷமி டக் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக ஹனுமா விஹாரி 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

முதல் இன்னிங்ஸில் அரைசதத்தை கடந்த நால்வரில் இஷாந்த் சர்மாவும் ஒருவர். மயன்க் அகர்வால், விராட் கோலி, ஹனுமா விஹாரி ஆகிய மூவரை தவிர, சிறப்பாக ஆடிய மற்றொரு வீரர் இஷாந்த் சர்மா. இஷாந்த் சர்மா 69 பந்துகளிலேயே அரைசதத்தை அடித்துவிட்டார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மாவின் முதல் அரைசதம். தற்போது ஆடிவரும் போட்டி, இஷாந்த் சர்மாவின் 92வது டெஸ்ட் போட்டி. 92வது போட்டியில் தான் தனது முதல் அரைசதத்தை அடித்துள்ளார். அதுவும் அதிரடி அரைசதம்.   7 பவுண்டரிகள் உட்பட 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மாவின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அவரது அரைசதத்தை பெவிலியனில் இருந்த கேப்டன் கோலி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார். அந்த வீடியோ இதோ.. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மளமளவென வீழ்த்திவிட்டார் பும்ரா. பும்ராவின் நேர்த்தியான மற்றும் துல்லியமான ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை! மேக்ஸ்வெல் ரெக்கார்டு ஊதி தள்ளிய 15 வயதான இளம் வீரர் வைபவ்!
Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!