அரையிறுதி போட்டியில் அவரு கண்டிப்பா ஆடுவாரு.. ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் அதிரடி தகவல்

Published : Jul 11, 2019, 01:51 PM IST
அரையிறுதி போட்டியில் அவரு கண்டிப்பா ஆடுவாரு.. ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் அதிரடி தகவல்

சுருக்கம்

ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் ஏற்கனவே காயம் காரணமாக தொடரை விட்டு விலகியதால் அவருக்கு பதிலாக ஹேண்ட்ஸ்கம்ப் அணியில் இணைந்தார். அவரை தொடர்ந்து கவாஜாவும் காயத்தால் வெளியேறியதால் அவருக்கு பதிலாக மேத்யூ வேட் அணியில் இணைந்துள்ளார்.   

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் ஏற்கனவே காயம் காரணமாக தொடரை விட்டு விலகியதால் அவருக்கு பதிலாக ஹேண்ட்ஸ்கம்ப் அணியில் இணைந்தார். அவரை தொடர்ந்து கவாஜாவும் காயத்தால் வெளியேறியதால் அவருக்கு பதிலாக மேத்யூ வேட் அணியில் இணைந்துள்ளார். 

ஹேண்ட்ஸ்கம்ப் மற்றும் வேட் ஆகிய இருவரும் அணியில் இணைந்திருப்பதால் இருவரில் யார் ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஹேண்ட்ஸ்கம்ப் சிறந்த வீரர். அதேநேரத்தில் மேத்யூ வேடும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். எனவே ஆடும் லெவனில் இருவரில் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஆடும் லெவனில் ஹேண்ட்ஸ்கம்ப் கண்டிப்பாக இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். 
 
PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!