
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கேகேஆரும் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதற்கு முன் ஆடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, 6வது வெற்றியை பெறும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆடாத நிலையில், இந்த போட்டியில் ஆடுவதால் விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த சீசனில் அனைத்து அணிகளுமே இதுவரை டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தனர். வெற்றி தோல்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, டாஸ் வென்றால் கண்ணை மூடிக்கொண்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்துவந்தனர் மற்ற அணிகளின் கேப்டன்கள். அந்த டிரெண்டை மாற்றியமைத்துள்ளார் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா. ஷமி, ஃபெர்குசன், ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், டெவாட்டியா, பாண்டியா என பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி, அதன் பலத்திற்கேற்ப பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், யஷ் தயால், முகமது ஷமி.
கேகேஆர் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரோன் ஃபின்ச், ஷெல்டான் ஜாக்சன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு சாம் பில்லிங்ஸ், டிம் சௌதி, ரிங்கு சிங் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேகேஆர் அணி:
வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், டிம் சௌதி, ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.