
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர், ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நால்கண்டே.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (7) மற்றும் மேத்யூ வேட் (19) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சாய் சுதர்சன் 11 ரன்னிலும், மந்தமாக ஆடிய டேவிட் மில்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
குஜராத் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. அதை சமாளித்து அருமையாக பேட்டிங் ஆடினார் ஹர்திக் பாண்டியா. அவருடன் இணைந்து அபினவ் மனோகரும் சிறப்பாக பேட்டிங் ஆடினார். 21 பந்தில் 35 ரன்கள் அடித்து அபினவ் மனோகர் ஆட்டமிழக்க, 42 பந்தில் அரைசதம் அடித்தார் ஹர்திக் பாண்டியா.
ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பான அரைசதம் மற்றும் அபினவ் மனோகரின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது குஜராத் டைட்டன்ஸ். 163 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது குஜராத் அணி.
ஷமி, ஃபெர்குசன், ரஷீத் கான், ஹர்திக் பாண்டியா, ராகுல் டெவாட்டியா, நால்கண்டே என பலம் வாய்ந்த பவுலிங் அட்டாக்கை கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, இது போதுமான ஸ்கோர் தான். சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரும் பலவீனமாக இருப்பதால் குஜராத் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.