குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு உடல் நிலையில் சரியில்லாத நிலையில், ரஷீத் கான் இன்றைய போட்டிக்கு கேப்டனாகியுள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த 16ஆவது சீசனில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மட்டுமே இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய போட்டிய்ல் வெற்றி பெற்று 3ஆவது வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மன் கில், விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான் (கேப்டன்), அபினவ் மனோகர், முகமது ஷமி, அல்சாரி ஜோசஃப், யாஷ் தயாள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ரஹமானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரூ ரஸல், ஷர்துல் தாக்கூர், சுயாஷ் ஷர்மா, சுனில் நரைன், லக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
IPL 2023: சென்னைக்கு தாயும், தகப்பனுமா தோனி இருக்கும் போது எவனால் ஜெயிக்க முடியும்: ஹர்பஜன் சிங்!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான தற்காலிக கேப்டனான ரஷீத் கான் பேட்டிங் தேர்வு செய்தார். அப்போது, ஏன் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டார். அதாவது ஹர்திக் பாண்டியாவிற்கு உடல் நிலை சரியில்லை. ஆதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய போட்டியில் அவர் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார்.
IPL 2023: எல்லாத்துக்கு சுதந்திரம் கொடுத்திருக்காரு; டாஸுக்கு முன்னாடி தான் எனக்கே தெரியும்: ரஹானே!
எனினும் அடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என்று கூறியுள்ளார். தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. இதே போன்று நேற்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மொயீன் அலிக்கு கூட உடல்நிலை சரியில்லை என்பதால் தான் ரஹானே களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் டிம் சவுதிக்குப் பதிலாக லக்கி ஃபெர்குசன் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், மந்தீப் சிங்கிற்குப் பதிலாக என் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: இஷான் கிஷானின் கேர்ல் ஃப்ரண்ட் யாருன்னு தெரியுமா?