GGT vs RCBW: கடைசியாக கிடைத்த வெற்றி – மகிழ்ச்சியோடு கொண்டாடும் குஜராத் ஜெயிண்ட்ஸ்!

By Rsiva kumar  |  First Published Mar 6, 2024, 11:08 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு எதிரான 13ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 13ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி லாரா வால்வார்ட் மற்றும் கேப்டன் பெத் மூனி இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் குவித்தது. இதில் லாரா வால்வார்ட் 45 பந்துகளில் 13 பவுண்டரி உள்பட 76 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து கேப்டனுடன் ஃபோப் லிட்ச்பீல்ட் களமிறங்கினார். அவர் 18 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஆஷ்லெக் கார்ட்னர் களமிறங்க, முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தயாளன் ஹேமலதா, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக பெத் மூனி 51 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tap to resize

Latest Videos

கடைசியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை சப்பினேனி மேகனா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா மற்றும் எல்லீஸ் பெர்ரி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் எடுத்தனர்.

இதில் ஸ்மிருதி மந்தனா 24 ரன்கள் எடுக்க, எல்லீஸ் பெர்ரி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷோஃபி டிவைன் 23 ரன்கள் எடுக்க, ரிச்சா கோஷ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜார்ஜியா வார்ஹாம் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷோபி மோலினெக்ஸ் 3 ரன்னிலும், சிம்ரன் பகதூர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க எக்தா பிஸ்ட் 12 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் நடையை கட்டினார். கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

குஜராத் ஜெயிண்ட்ஸ்:

பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), லாரா வால்வார்ட், ஃபோப் லிட்ச்பீல்டு, வேத கிருஷ்ணமூர்த்தி, தயாளன் ஹேமலதா, அஷ்லேக் கார்ட்னர், கத்ரின் பிரைஸ், மேக்னா சிங், மன்னட் காஷ்யப், சப்னம் முகமது சகீல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

சப்னேனி மேகனா, ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷோஃபி டிவைன், ஷோஃபி மோலினெக்ஸ், ஜார்ஜியா வார்ஹாம், எக்தா பிஸ்ட், சிம்ரன் பகதூர், ஆஷா ஷோபனா, ரேணுகா தாகூர் சிங்.

click me!