மேக்ஸ்வெல் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவன்..! அதிர்ச்சிகர தேர்வு.. பெருங்கொண்ட தலைக்கே அணியில் இடம் இல்ல

By karthikeyan VFirst Published Aug 14, 2020, 3:11 PM IST
Highlights

தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார் க்ளென் மேக்ஸ்வெல்.
 

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடக்கவுள்ளது. எனவே அனைத்து ஐபிஎல் அணிகளும், ஐபிஎல்லில் ஆடும் வீரர்களும் தீவிரமாக தயாராகிவருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரருமான க்ளென் மேக்ஸ்வெல், தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல், ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான வீரர். டெல்லி(டேர்டெவில்ஸ், கேபிடள்ஸ்), கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளில் ஆடியுள்ளார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்லை இந்த சீசனில் ரூ.10.75 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. 

கிரிக்பஸ் இணையதளத்தில் ஹர்ஷா போக்ளேவுடன் பேசிய மேக்ஸ்வெல், தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 

தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஐபிஎல்லில் அதிக ரன்கள்(5412) அடித்த விராட் கோலி மற்றும் இந்த பட்டியலில் நான்காமிடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.

3ம் வரிசை வீரராக டிவில்லியர்ஸையும் 4ம் வரிசையில் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னாவையும் தேர்வு செய்துள்ள மேக்ஸ்வெல், 5ம் வரிசை வீரராக தன்னையே தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பர்-ஃபினிஷராக தோனியையும் ஸ்பின்னராக ஹர்பஜன் சிங் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் மோஹித் சர்மா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான ரோஹித் சர்மாவிற்கு தனது ஆல்டைம் லெவனில் மேக்ஸ்வெல் இடமளிக்கவில்லை. அதிகபட்சமாக 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா. ஆனால் அவருக்கே தனது ஆல்டைம் லெவனில் இடமளிக்கவில்லை மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல்லின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, க்ளென் மேக்ஸ்வெல், ஆண்ட்ரே ரசல், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பும்ரா, மோஹித் சர்மா.
 

click me!