#IPL2021 நான் அதிகமான விலைக்கு ஏலம் போவேன்னு சத்தியமா நெனச்சேன்..! காரணத்துடன் சொல்லும் மேக்ஸ்வெல்

By karthikeyan VFirst Published Apr 7, 2021, 10:04 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் ரூ.14.25 கோடிக்கு, தான் எடுக்கப்பட்டதில் தனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை என்று க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அடித்து துவம்சம் செய்யும் மேக்ஸ்வெல், ஐபிஎல் என்று வந்தால், பொட்டிப்பாம்பாய் அடங்கிப்போகிறார். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். கடந்த சீசனில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. இதையடுத்து அவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டது.

ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் மீது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டின. மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே சரியாக ஆடவில்லை என்றாலும், அவர் நல்ல ஃபினிஷர் என்ற வகையில், அதற்கான தேவையிருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக கடும் போட்டியிட்டன.  கடைசியில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது.

மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சொதப்பினாலும் கூட, அவரை ஐபிஎல் அணிகள் அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை. கடந்த சீசனில் படுமோசமாக சொதப்பியும் கூட, மேக்ஸ்வெல்லை எடுக்க ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மிகுந்த ஆர்வம் காட்டின. ஒருவழியாக கடைசியில் ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில் சொதப்பியும் கூட, அதைவிட கூடுதல் தொகைக்கு(ரூ.14.25கோடி) ஏலம்போனார் மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் தொடர்ந்து சொதப்பினாலும், அவரை அணிகள் அதிகமான விலை கொடுத்து இன்னும் ஏலத்தில் எடுப்பதை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், தான் அதிக விலைக்கு ஏலம் போனது தனக்கு வியப்பாக இல்லை என்றும், இதை எதிர்பார்த்ததாகவும் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள க்ளென் மேக்ஸ்வெல், நான் அதிக விலைக்கு ஏலம்போனது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் ஒருசில அணிகள் ஆஃப் ஸ்பின் பவுலிங் போட தெரிந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை எதிர்நோக்கியிருந்தன என்று எனக்கு தெரியும் என்பதால், நான் அதிக விலைக்கு ஏலம்போனதில் எனக்கு ஆச்சரியமில்லை என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
 

click me!