ஜார்ஜ் பெய்லி பண்ண அட்டூழியத்தை பாருங்க.. வீடியோ

Published : Oct 31, 2019, 12:31 PM IST
ஜார்ஜ் பெய்லி பண்ண அட்டூழியத்தை பாருங்க.. வீடியோ

சுருக்கம்

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் முதல் தர கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில் ஜார்ஜ் பெய்லி வித்தியாசமாக பேட்டிங் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.   

ஆஸ்திரேலியாவில் முதல் தர கிரிக்கெட் தொடரான ஷெஃபில்ட் ஷீல்டு தொடர் நடந்துவருகிறது. இதில் டாஸ்மானியா மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் முதல் நாளான இன்று, முதலில் பேட்டிங் ஆடிய விக்டோரியா அணி வெறும் 127 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் டாஸ்மானியா அணி 105 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கேப்டன் மேத்யூ வேடும் ஜேக் டோரானும் இணைந்து ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியில் பவுலரை குழப்புவதற்காக ஜார்ஜ் பெய்லி வித்தியாசமான பொசிசனில் நின்று பேட்டிங் ஆடிய வீடியோ வைரலாகிவருகிறது. பீட்டர் சிடிலின் பவுலிங்கை எதிர்கொள்ளும்போது முதுகை காட்டியபடி திரும்பிநின்றார். பின்னர் ஷார்ட் லெந்த்தில் வீசப்பட்ட அந்த பந்தை பவுண்டரியும் அடித்தார். அந்த வீடியோ இதோ..

முதல் இன்னிங்ஸில் பெய்லி 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!