திடீரென கிரிக்கெட்டிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்.. கலங்கவைக்கும் காரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Oct 31, 2019, 11:04 AM IST
Highlights

ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டரிலும் டெத் ஓவர்களிலும் வலுசேர்க்கும் மேக்ஸ்வெல், வெகுசில பந்துகளில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பக்கூடிய திறன் பெற்றவர். 
 

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் திடீரென கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடுவதில்லை. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டரிலும் டெத் ஓவர்களிலும் மேக்ஸ்வெல் வலுசேர்க்கிறார். வெகுசில பந்துகளில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பக்கூடிய திறன் பெற்றவர். 

இலங்கைக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் கூட ஆடினார். அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து மிரட்டினார். இரண்டாவது போட்டியில், ஸ்மித்தும் வார்னரும் இணைந்தே போட்டியை முடித்துவிட்டதால், மேக்ஸ்வெல்லுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில், மனரீதியாக சில பிரச்னைகள் இருப்பதால், சில காலம் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்பி, காலவரையற்ற பிரேக் எடுத்துள்ளார் மேக்ஸ்வெல். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய டி20 அணியின் நட்சத்திர அதிரடி வீரரான மேக்ஸ்வெல், திடீரென டைம் எதுவுமே சொல்லாமல் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கும் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. 

எனினும் அழுத்தம் இல்லாத தெளிவான மனநிலையுடன் இருந்தால்தான் நன்றாக ஆடமுடியும். எனவே அவரது முடிவுக்கு அந்த அணி நிர்வாகமும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. 

மேக்ஸ்வெல் அதிரடி பேட்ஸ்மேன் மட்டுமல்லாது அபாரமான ஃபீல்டரும் கூட. விக்கெட்டே விழுகாத நேரங்களில், சில ஓவர்களை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேக் கொடுக்கக்கூடிய, மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரும் உள்ள நிலையில், மேக்ஸ்வெல் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு. 
 

click me!