எவ்வளவு பெரிய கிரேட் பிளேயரை இவ்வளவு அசால்ட்டா அசிங்கப்படுத்தீட்டிங்க.. பிசிசிஐ அதிகாரியை விளாசிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Mar 20, 2020, 4:39 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் வீரரான சையத் முஷ்டாக் அலி தொடரை தரம்தாழ்த்தி பேசும் விதமாக கருத்து தெரிவித்த பிசிசிஐ அதிகாரியை முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கடுமையாக விளாசியுள்ளார்.
 

கொரோனா அச்சுறுத்தலால் வரும் 29ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவிவருவதால், அதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்வதே பெரிய பிரச்னையாக இருக்கும் நிலையில், கிரிக்கெட் தொடர்களை பற்றியெல்லாம் நினைத்துக்கூட பார்க்கும் நிலையில், நாடும் நாட்டு மக்களும் இல்லை. 

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டால்தான் ஐபிஎல் தொடர் நடத்தப்படும். ஐபிஎல்லை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். அதனால் ஐபிஎல்லில் ஆட வெளிநாட்டு வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

கொரோனா பாதிப்பால் வெளிநாட்டினருக்கு ஏப்ரல் 15ம் தேதிவரை விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளிநாட்டு விரர்கள் இந்தியாவிற்கு வரமுடியாத நிலை உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல்லை நடத்த முடியாது. அப்படி நடத்த இது ஒன்றும் சையத் முஷ்டாக் அலி தொடர் அல்ல என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

பிசிசிஐ அதிகாரியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கவாஸ்கர். சையத் முஷ்டாக் அலி என்பவர் இந்திய அணியின் முன்னாள் வீரர். அவரது கௌரவப்படுத்தும் விதமாக அவரது பெயரில், பிசிசிஐ, ஆண்டுதோறும் உள்நாட்டு டி20 தொடரை நடத்திவருகிறது. இந்நிலையில், ஐபிஎல்லை உயர்த்தி பிடிப்பதற்காக, சையத் முஷ்டாக் அலி தொடரை அலட்சியப்படுத்தும் விதமாகவும் தரம்தாழ்த்தும் விதமாகவும் அமைந்துள்ள பிசிசிஐ அதிகாரியின் கருத்தை கடுமையாக கண்டித்துள்ளார் கவாஸ்கர். 

இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், கொரோனா எதிரொலியால் வெளிநாட்டு வீரர்கள் ஏப்ரல் 15ம் தேதி வரை இந்தியாவிற்கு வரமுடியாத சூழல் உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவது அவசியம் தான். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஆடுவதற்கு ஐபிஎல் ஒன்றும் சையத் முஷ்டாக் அலி தொடர் அல்ல என்று பிசிசிஐ அதிகாரி கூறியிருப்பது, அந்த தொடரின் தரத்தை குறைத்து காட்டுவதாக இருக்கிறது. இது மிகவும் மோசமான கருத்து. சிறந்த வீரராக திகழ்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்திருக்கும் சையத் முஷ்டாக் அலியின் மதிப்பை குறைப்பதாக இந்த செயல் அமைந்துள்ளது. 

சையத் முஷ்டாக் அலி தொடர் அப்படி தரமற்ற முறையில் நடத்தப்படுகிறது என்றால், அதை ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சர்வதேச அளவில் ஆடும் வீரர்கள் முஷ்டாக் அலி தொடரில் ஆடவில்லை என்பதற்காக அது மோசமான தொடராகிவிடுமா? என்று கவாஸ்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.
 

click me!