மத்தவங்களுக்கு ஒரு நியாயம்.. கோலிக்கு ஒரு நியாயமா..? இது என்ன அநியாயம்.. இவரு கேப்டனை காலி பண்ணாம விடமாட்டாரு போலவே

By karthikeyan VFirst Published Jul 29, 2019, 5:01 PM IST
Highlights

உலக கோப்பைக்கு பின்னரும் விராட் கோலி கேப்டனாக தொடர்வது பிடிக்காததால், தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் கவாஸ்கர். 
 

உலக கோப்பைக்கு பின்னரும் விராட் கோலி கேப்டனாக தொடர்வது பிடிக்காததால், தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் கவாஸ்கர். 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. உலக கோப்பை தோல்விக்கு பின்னர் விராட் கோலியை ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. 

ஆனாலும் இந்திய அணியின் கேப்டனாக கோலி தன தொடர்கிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் மூன்றுவிதமான அணிகளுக்கும் கோலியே கேப்டனாக செயல்படவுள்ளார். கோலியின் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஐபிஎல் சமயத்திலேயே கோலியின் படுமோசமான கேப்டன்சியை கம்பீர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

அதேநேரத்தில் ரோஹித் சர்மா தனக்கு கேப்டனாக செயல்பட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தி, ஆசிய கோப்பை, நிதாஹஸ் டிராபி ஆகிய தொடர்களை வென்றுகொடுத்தார். எனவே ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது அனைவருக்குமே நம்பிக்கை உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் கேப்டன் கோலி, துணை கேப்டனான ரோஹித்தை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் ரோஹித் மற்றும் கோலிக்கு இடையே பனிப்போர் நிலவுவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இவையெல்லாம் இந்திய அணியில் ஒரு புயல் சத்தமில்லாமல் அடித்துக்கொண்டிருப்பதை உணர்த்தியது. 

இந்திய அணியில் தற்போதிருக்கும் சிக்கல்களை கலைந்து வலுவான அணியை உருவாக்க ரோஹித்தால் முடியும் என்பதால் கேப்டனை மாற்ற இதுவே சரியான தருணம் என பிசிசிஐ அதிகாரியே தெரிவித்ததாக ஒரு தகவல் வந்தது. பிசிசிஐ அதிகாரியே இவ்வாறு தெரிவித்ததால் கேப்டன் மாற்றப்படுவாரா என பலர் யோசித்திருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலியின் பவர் அபரிமிதமானது. எனவே அவரை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

விராட் கோலியே தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ள நிலையில், அதுகுறித்த அதிருப்தியை கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து மிட் டே பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், எனக்கு தெரிந்தவரை உலக கோப்பை வரை மட்டுமே கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பின்னரும் கேப்டனாக தொடர்கிறார். உலக கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை என்பதால் கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ஒரு கேப்டனாக கோலியும் தான் உலக கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. உலக கோப்பையில் இறுதி போட்டிக்குக்கூட முன்னேறமுடியாமல் வெளியேறியது. ஆனால் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படவில்லை என்று கவாஸ்கர் தனது அதிருப்தியை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். 
 

click me!