கோலி அவராவே கேப்டன் ஆயிட்டாரா இல்ல நீங்கதான் செலக்ட் பண்ணீங்களா..? ரோஹித்துக்காக வரிந்துகட்டும் கவாஸ்கரின் மும்பை பாலிடிக்ஸ்

By karthikeyan VFirst Published Jul 29, 2019, 4:09 PM IST
Highlights

உலக கோப்பை தோல்வியை அடுத்து கேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ரோஹித் சர்மா தனக்கு கேப்டனாக செயல்பட கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். எனவே ரோஹித்தை கேப்டனாக நியமித்து அடுத்த உலக கோப்பைக்கு வலுவான அணியை தயார் செய்ய வேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவியது. இந்திய அணியில் தற்போதிருக்கும் சிக்கல்களை கலைந்து வலுவான அணியை உருவாக்க ரோஹித்தால் முடியும் என்பதால் கேப்டனை மாற்ற இதுவே சரியான தருணம் என பிசிசிஐ அதிகாரியே தெரிவித்ததாக ஒரு தகவல் வந்தது.
 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த 4ம் வரிசை பேட்ஸ்மேனை 2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பையில் தோற்று இந்திய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு பின்னர் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இந்திய அணி, ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், துணை கேப்டன் என்ற வகையில் ரோஹித்தின் ஆலோசனையை கேட்காமலேயே கேப்டன் கோலி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும் ஒரு தகவல் வந்தது. 

உலக கோப்பை தோல்வியை அடுத்து கேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ரோஹித் சர்மா தனக்கு கேப்டனாக செயல்பட கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். எனவே ரோஹித்தை கேப்டனாக நியமித்து அடுத்த உலக கோப்பைக்கு வலுவான அணியை தயார் செய்ய வேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவியது. இந்திய அணியில் தற்போதிருக்கும் சிக்கல்களை கலைந்து வலுவான அணியை உருவாக்க ரோஹித்தால் முடியும் என்பதால் கேப்டனை மாற்ற இதுவே சரியான தருணம் என பிசிசிஐ அதிகாரியே தெரிவித்ததாக ஒரு தகவல் வந்தது.

ஆனாலும் கோலி தான் கேப்டனாக தொடர்கிறார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதுமே ஆடுகிறார். மூன்று தொடர்களிலும் கோலி தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு இன்று இந்தியாவிலிருந்து கிளம்புகிறது. இந்நிலையில், கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தது தொடர்பாக தேர்வுக்குழுவிற்கு கேள்வி எழுப்பி தனது ஆட்சேபணையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். 

இதுகுறித்து மிட் டே பத்திரிகைக்கு கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வு குறித்த கலந்தாய்வுக்கு முன்னர், கேப்டனை தேர்வு செய்வது குறித்து விவாதித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் கோலியை கேப்டனாக நியமித்துவிட்டு, பின்னர் அவருடன் அணி தேர்வு குறித்து விவாதித்தது, கோலியை தேர்வுக்குழு கேப்டனாக நியமித்ததா அல்லது அவரை அவரே கேப்டனாக நியமித்துக்கொண்டாரா என்ற சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்புகிறது. எனக்கு தெரிந்தவரை, உலக கோப்பைவரை தான் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கோலியே மீண்டும் கேப்டனாக தொடர்வதற்கு மும்பையை சேர்ந்த முன்னாள் வீரர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்தவித பிரச்னையும் இல்லை. ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் தான் என்றாலும் அவருக்கு மறைமுக ஆதரவை தெரிவிக்கும் விதமாக கவாஸ்கர் கருத்து தெரிவிப்பதுதான் பாலிடிக்ஸ். இந்திய அணியில் பொதுவாகவே மும்பை பாலிடிக்ஸ் ரொம்ப அதிகம். மும்பையிலிருந்து இந்தியாவுக்காக ஆடிய கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்றோர் ஜாம்பவான்கள் என்பதால் அவர்களின் குரல் வலுத்து ஒலிக்கும். மும்பையை சேர்ந்த முன்னாள் வீரர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் மும்பையை சேர்ந்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் மறைமுக ஆதரவை வெளிப்படுத்துவதும் வழக்கமாக இந்திய கிரிக்கெட்டில் நடந்துகொண்டிருப்பதுதான். 
 

click me!