சுயநலத்தோட ஆடுன நிறைய வீரர்களை என் கெரியரில் பார்த்துருக்கேன்.. ஆனால் கோலி கிரேட்.. மனதார பாராட்டிய கம்பீர்

By karthikeyan VFirst Published Jan 17, 2020, 1:06 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி, தனது பேட்டிங் ஆர்டரை ராகுலுக்கு கொடுத்துவிட்டு நான்காம் வரிசையில் இறங்கியதை கம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார். 
 

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாம் வரிசையில் இறங்கி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்து பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். மூன்றாம் வரிசையில் அபாரமாக ஆடிவரும் கோலி, கொஞ்சம் கூட சுயநலம் இல்லாமல், அந்த இடத்தில் நான் தான் இறங்குவேன் என்று அடம்பிடிக்காமல் தனது இடத்தை ராகுலுக்கு விட்டுக்கொடுத்தார். 

காயத்திலிருந்து தவான் மீண்டு மீண்டும் அணியில் இடம்பிடித்த நிலையில்,  ரோஹித்தும் தவானும் தொடக்க வீரர்களாக இறங்குகின்றனர். அதேநேரத்தில் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலும் டாப் ஃபார்மில் இருப்பதால், அவரையும் அணியிலிருந்து ஓரங்கட்ட முடியாது என்பதால், அவரும் அணியில் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே ரோஹித்துடன் தவானை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, தனது மூன்றாம் வரிசையை ராகுலுக்கு வழங்கிவிட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கினார். 

Also Read - ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக இந்திய அணியில் இணையும் சூப்பர் விக்கெட் கீப்பர்

சுயநலம் இல்லாமல் அணியின் நலன் கருதி விராட் கோலி இந்த முடிவை எடுத்தார். விராட் கோலியின் இந்த செயலை கம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு எழுதியுள்ள கட்டுரையில் கம்பீர், கோலியை பாராட்டி எழுதியுள்ளார். 

”தனது பேட்டிங் ஆர்டரை விட்டுத்தராமல், அதே ஆர்டரில் தான் ஆடுவேன் என்று அடம்பிடித்த பல வீரர்களை நான் எனது கெரியரில் பார்த்திருக்கிறேன். அணியின் நலனை விட தனது நலனிற்கும் ரெக்கார்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரே பேட்டிங் ஆர்டரில் ஆடிய வீரர்கள் இருக்கிறார்கள். வேற பேட்டிங் ஆர்டரில் ஆடி ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில், கோலியின் செயல்பாடு பாராட்டுக்குரியது. 

Also Read - விராட் கோலியின் வீக்னெஸை கண்டுபிடித்த ஆடம் ஸாம்பா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராகுலை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு, கோலி நான்காம் வரிசையில் ஆடியது மிகுந்த பாராட்டுக்குரிய விஷயம். வீரர்கள் தங்களுக்கென்று ஒரு பேட்டிங் ஆர்டரை நிரந்தரப்படுத்தி கொள்ளாமல், அணியின் நலனுக்கு ஏற்ப எந்த ஆர்டரிலும் பேட்டிங் ஆட வேண்டும். அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இது ஒரு அணியாக ஆடும் ஆட்டம். எனவே தனிப்பட்ட நலனில் அக்கறை காட்டாமல் நாட்டுக்காக, ஒரு அணியாக இணைந்து ஆட வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். அந்தவகையில், கோலியின் துணிச்சலான தன்னலமற்ற முடிவை பாராட்டியிருக்கிறார் கம்பீர். 

click me!