விராட் கோலியின் வீக்னெஸை கண்டுபிடித்த ஆடம் ஸாம்பா

By karthikeyan VFirst Published Jan 17, 2020, 11:07 AM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து ரன்களை வாரிக்குவித்துவரும் ரன் மெஷின் விராட் கோலியின், பலவீனத்தை கண்டறிந்து கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து ரன் மெஷினாக வலம்வருகிறார். 

விராட் கோலியை விரைவில் வீழ்த்தாவிட்டால், எதிரணி வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம். எனவே எதிரணிகளின் முழுக்கவனமும் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதில் தான் எப்போதுமே இருக்கும். ஆனால் கோலி நிலைத்துவிட்டால், கண்டிப்பாக சதமடிப்பதும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதும் உறுதி என்பது நாம் அறிந்ததே. 

Also Read - அதெல்லாம் சரியா வராது.. 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

மூன்றாம் வரிசையில் இறங்கி ரன்களை வாரிக்குவித்த விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கினார். தவானும் ராகுலும் சற்று மந்தமாக பேட்டிங் ஆடியதால், கோலி களத்திற்கு வந்த நேரத்தில் ஸ்கோர் குறைவாக இருந்ததால், அதிரடியாக ஆட முனைந்து 16 ரன்களில் ஆட்டமிழந்தார் கோலி. 

கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே, தற்போதைய பவுலர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கும் நிலையில், கோலியின் விக்கெட்டை அடிக்கடி வீழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ள ஆஸ்திரேலிய ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா, விராட் கோலியின் வீக்னெஸை கண்டுபிடித்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று ராஜ்கோட்டில் நடக்கவுள்ளது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆடம் ஸாம்பா, கோலி குறித்து பேசினார். அப்போது கோலியின் பலவீனத்தை தெரிவித்தார். 

Also Read - போக்குக்காட்டிய தோனிக்கு ஆப்பு அடித்த பிசிசிஐ.. தோனியின் கெரியர் ஓவர்

”கோலி பேட்டிங் ஆட களத்திற்கு வந்ததும், அவரது இன்னிங்ஸின் தொடக்கத்தில் லெக் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுகிறார். கோலி நல்ல ஸ்டார்ட்டர் தான். ஆனால், களத்திற்கு வந்ததும் லெக் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் அவரிடத்தில் சிக்கல் இருக்கிறது. கோலிக்கு எதிராக சிறப்பான திட்டத்துடன் களமிறங்கி செயல்படுவது அவசியம். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 4 முறை அவரை அவுட்டாக்கியிருக்கிறேன். இது, அவருக்கு எதிராக ஆட எனக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. 

விராட் கோலிக்கு பந்துவீசும்போது, அட்டாக் செய்யும் விதமாக வீச வேண்டும். அவரை ரன் அடிக்கவிடாமல் தடுக்கும் நோக்கில் பந்துவீசினால், அவர் பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ரன்களை அடித்து குவித்துவிடுவார். எனவே அவரை அவுட்டாக்கும் நோக்கில் அட்டாக் செய்து வீச வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஆடும்போது கேரக்டர் தான் ரொம்ப முக்கியம்.

நான் கோலியை நிறைய முறை வீழ்த்தியிருக்கிறேன். ஆனாலும் எனக்கு எதிராக அவரது ஸ்டிரைக் ரேட் 100க்கும் அதிகம். அதுதான் கோலி. பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான பேட்ஸ்மேன் கோலி. நான் பந்துவீசியதில், கடினமான பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர் கோலி என்று ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார். 
 

click me!