போக்குக்காட்டிய தோனிக்கு ஆப்பு அடித்த பிசிசிஐ.. தோனியின் கெரியர் ஓவர்

By karthikeyan VFirst Published Jan 17, 2020, 10:20 AM IST
Highlights

இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் கெரியர் முடிந்துவிட்டது என்பதை பிசிசிஐ-யின் செயல்பாடு பறைசாற்றுகிறது. 
 

இந்திய அணியின் சீனியர் வீரரான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய தோனி, அதன்பின்னர் ஓய்வும் அறிவிக்காமல், தனது எதிர்கால திட்டம் குறித்து பிசிசிஐ-க்கும் தெரிவிக்காமல் இருந்துவந்தார். 

உலக கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர், கடந்த ஆறு மாதங்களாக தோனி ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. உலக கோப்பைக்கு அடுத்து இந்திய அணி மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தன்னை விடுவித்துக்கொண்ட தோனி, அதன்பின்னர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

இந்நிலையில்,  2020ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ. அதில் தோனியின் பெயர் இல்லவே இல்லை. எனவே தோனி இனிமேல் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பில்லை. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறைந்தது 3 டி20 போட்டிகளிலாவது ஆடினால்தான், அந்த வீரரின் பெயர், ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம்பெறும். தோனி கடந்தன் 6 மாதங்களில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. எனவே அவரது பெயரை 2020ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது பிசிசிஐ. 

Also Read - விராட் கோலியின் வீக்னெஸை கண்டுபிடித்த ஆடம் ஸாம்பா

ஏ+பிரிவு (ரூ.7 கோடி) - ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா

ஏ பிரிவு(ரூ.5 கோடி) - அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரஹானே, புஜாரா, தவான், ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல்.

Also Read - அதெல்லாம் சரியா வராது.. 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

பி பிரிவு (ரூ.3 கோடி) - ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், சாஹல், மயன்க் அகர்வால், ரிதிமான் சஹா.

சி பிரிவு (ரூ.1 கோடி) - கேதார் ஜாதவ், மனீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர்.
 

click me!