கங்குலி, தோனி 2 பேருமே இல்ல.. இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் அவருதான்.. கம்பீரின் நேர்மையான கருத்து

By karthikeyan VFirst Published Apr 23, 2020, 5:25 PM IST
Highlights

இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வழக்கம்போலவே ஒளிவுமறைவின்றி தனது கருத்தை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கவுதம் கம்பீர், 2003ல் சவுரவ் கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் அறிமுகமானார். அவர் 2016ம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆடினார். கங்குலியின் கேப்டன்சியில் அறிமுகமான கம்பீர், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், தோனி ஆகியோரின் கேப்டன்சியில் மட்டுமல்லாமல் தற்போதைய கேப்டன் கோலியின் கேப்டன்சியின் கீழும் ஆடியுள்ளார்.

இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் கம்பீர். தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை என அந்த 2 உலக கோப்பைகளையும் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கம்பீர். குறிப்பாக அந்த 2 உலக கோப்பைகளின் ஃபைனலிலும் அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

மனதில் பட்டதை மிகவும் நேர்மையாகவும் பயமின்றியும் வெளிப்படையாக பேசக்கூடியவர் கம்பீர். அந்தவகையில், தான் ஆடியதிலேயே இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்பீர், ரெக்கார்டுகளின் அடிப்படையில் பார்த்தால் கண்டிப்பாக தோனி தான் முன்னிலையில் இருப்பார். ஆனால் நான் ஆடியதில், என்னை பொறுத்தமட்டில் அனில் கும்ப்ளே தான் சிறந்த கேப்டன். 

கங்குலி சிறந்த கேப்டன் தான். இந்திய அணிக்காக சிறப்பான பங்காற்றியிருக்கிறார். ஆனால் இந்திய அணியின் கேப்டனாக ஒருவர் நீண்டகால இருக்க வேண்டும் என்று நான் விரும்பியது கும்ப்ளேவைத்தான். அவரது கேப்டன்சியில் நான் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளேன். அவர் இந்திய அணியின் கேப்டனாக நீண்டகாலம் இருக்கவில்லை. ஆனால் அவர் மட்டும் நீண்டகாலம் இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியிருந்தால், பல சாதனைகளை தகர்த்திருப்பார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 
அனில் கும்ப்ளே அவரது சர்வதேச கிரிக்கெட் கெரியரில் 17வது ஆண்டில்தான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். டிராவிட் 2007ம் ஆண்டு கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ஒருநாள் அணிக்கு தோனி கேப்டனாகவும் டெஸ்ட் அணிக்கு கும்ப்ளே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!