கவுதம் கம்பீரின் ஆல்டைம் இந்தியா டெஸ்ட் லெவன்.. செம டீம்

By karthikeyan VFirst Published May 3, 2020, 5:32 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். சமூக பொருளாதார செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால் வீடுகளில் முடங்கியுள்ள முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுடன் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடனும் சக வீரர்களுடனும் உரையாடுவது மற்றும் ஆல்டைம் லெவனை தேர்வு செய்வது என பொழுதுபோக்கிவருகின்றனர். 

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்தியாவின் பெஸ்ட் ஆல்டைம் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவின் ஆல்டைம் டெஸ்ட் லெவனின் தொடக்க வீரர்களாக சுனில் கவாஸ்கர் மற்றும் சேவாக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். கவாஸ்கர் ஆல்டைம் உலக கிரிக்கெட்டின் பேட்டிங் ஜாம்பவான். அவருடன், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் அடித்த ஒரே வீரரான அதிரடி மன்னனும் தனது சக வீரரும் பேட்டிங் பார்ட்னருமான சேவாக்கை தேர்வு செய்துள்ளார் கம்பீர்.

மூன்று மற்றும் நான்காம் வரிசைகளில் முறையே டிராவிட் மற்றும் சச்சினை தவிர வேறு யாரையுமே நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே அவர்கள் இருவரும் தான் அந்த வரிசையில்.. ராகுல் டிராவிட்டை மூன்றாம் வரிசை வீரராகவும் சச்சின் டெண்டுல்கரை நான்காம் வரிசை வீரராகவும் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.  

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடம். அவர் 15921 ரன்களை குவித்துள்ளார். அந்த பட்டியலில் 13288 ரன்களை குவித்த டிராவிட் தான் நான்காமிடம். ஒரே காலக்கட்டத்தில் ஆடிய இருபெரும் ஜாம்பவான்களையும் தனது ஆல்டைம் லெவனில் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலியை ஐந்தாம் வரிசையிலும் ஆல்ரவுண்டராக கபில் தேவையும் விக்கெட் கீப்பராக முன்னாள் கேப்டன் தோனியையும் தேர்வு செய்துள்ள கம்பீர், ஸ்பின்னர்களாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜனையும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்தையும் தேர்வு செய்துள்ளார். 

கம்பீர் தேர்வு செய்துள்ள அணியில் கபில் தேவ், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, தோனி ஆகிய அனைவருமே முன்னாள் கேப்டன்கள். எனவே இந்த அணிக்கான கேப்டன் தேர்வு மிகவும் சவாலானது. அப்படியிருக்கையில், அனில் கும்ப்ளேவை தனது ஆல்டைம் டெஸ்ட் லெவனுக்கு கேப்டனாக தேர்வு செய்துள்ளார் கம்பீர். இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் கும்ப்ளே தான் என்றும், இன்னும் அதிகமான காலம் அவர் கேப்டனாக இருந்திருந்தால் நிறைய சாதனைகளை முறியடித்திருப்பார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே அவரைத்தான் கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

கம்பீரின் ஆல்டைம் இந்தியா டெஸ்ட் லெவன்:

சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கபில் தேவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே(கேப்டன்), ஜாகீர் கான், ஜவகல் ஸ்ரீநாத்.
 

click me!