
2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017ம் ஆண்டு வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார். 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, அனைத்துவிதமான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய கோலி, இனிமேல் இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ளார்.
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் கடந்த 2 ஆண்டுகளாக அவரது அல்டிமேட் திறமையின் அளவிற்கு இல்லை. 70-80 ரன்கள் ஸ்கோர் செய்தாலும், அவர் சதமடித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனவே கேப்டன்சியிலிருந்து விலகிய கோலி, கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் இனிமேல் பேட்டிங்கில் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய அணியில் கோலியின் ரோல் குறித்து பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். கோலி இனிமேல் கிரிக்கெட்டை எப்படி அணுகவேண்டும் என்று கருத்து கூறிவருகின்றனர். விராட் கோலியே தனது ரோல் குறித்து பேசியிருந்தார். அணியின் தலைவனாக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கெத்தாக கூறினார் கோலி.
இந்நிலையில், இந்திய அணியில் கோலியின் ரோல் குறித்து பேசிய கௌதம் கம்பீர், கோலியின் ரோலில் எதுவுமே மாறப்போவதில்லை. அவர் இந்திய அணியில் இடம்பெற்ற ஆரம்பக்காலக்கட்டத்தில் அணியின் வெற்றிக்காக எப்படி போராடினாரோ அதேமாதிரி ஆட வேண்டியதுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் ஏதாவது பங்கம் ஏற்பட்டால் பின்னர் அனைத்துமே தவறாக முடிந்துவிடும். அணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தேவா கேப்டனாக செயல்பட்டார்.. கேப்டன்சி என்பது கூடுதல் பொறுப்பு தான். இதேமாதிரி தான் கோலியும் யோசிப்பார் என நினைப்பதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.