இதெல்லாம் சரிப்பட்டு வராது.. இந்திய அணியின் முக்கியமான முடிவை விமர்சித்த கம்பீர்

By karthikeyan VFirst Published Feb 6, 2020, 12:50 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் அணி நிர்வாகம் செய்துள்ள மாற்றம் சரிப்பட்டு வராது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட கேஎல் ராகுல், தவான் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி இரண்டு அணிகளிலும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

பேட்டிங்கில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பராக செயல்படும் வாய்ப்பையும் அருமையாக பயன்படுத்தி கொண்டார் கேஎல் ராகுல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் காயமடைந்ததை அடுத்து, அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து அசத்தினார். இதையடுத்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று கேப்டன் கோலி உறுதி செய்து அறிவித்துவிட்டார். எனவே அணியில் தனக்கான நிரந்தர இடத்தை ராகுல் பிடித்துவிட்டார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் ஆடி அசத்தினார் ராகுல். முதல் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடிய ராகுல், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் ஐந்தாம் வரிசையில் இறங்கினார். அந்த போட்டியில் அதிரடியாக ஆடி 52 பந்தில் 80 ரன்களை குவித்து அசத்தினார். ராகுலின் அதிரடியான பேட்டிங், அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்தது. கடைசி போட்டியில் தொடக்க வீரராக இறங்கினார். இவ்வாறு அணி நிர்வாகம் எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்க சொன்னாலும், அந்த ஆர்டரில் இறங்கி அதற்கு நியாயம் செய்தார் ராகுல். 

ராகுல் வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் ஆடியது மற்றும் விக்கெட் கீப்பர் இல்லாத நிலையில், விக்கெட் கீப்பிங் செய்தது ஆகியவற்றின் விளைவாக, ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுல் ஐந்தாம் வரிசையில் சிறப்பாக ஆடியதால், ஒருநாள் போட்டிகளில் அவர் ஐந்தாம் வரிசையில் தான் ஆடுவார் என்பதை கேப்டன் கோலி உறுதி செய்தார். அதேபோலவே நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ராகுல் ஐந்தாம் வரிசையில் தான் இறங்கி ஆடினார். அந்த வரிசையில் மீண்டும் ஒருமுறை மிகச்சிறப்பாக ஆடி அசத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐந்தாம் வரிசையில் இறங்கி அதிரடியாக பேட்டிங் ஆடி 64 பந்தில் 88 ரன்களை குவித்தார் ராகுல்.

அந்த வரிசையில் ராகுல் சிறப்பாக ஆடியிருந்தாலும், அவருக்கு சரியான பேட்டிங் ஆர்டர் அதுவல்ல என்பது கம்பீரின் கருத்து. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கம்பீர் எழுதியுள்ள கட்டுரையில், தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 

Also Read - இரட்டை சதம் விளாசிய தமிழ்நாட்டு வீரர்.. இன்னிங்ஸ் வெற்றி உறுதி

”ஒருநாள் போட்டிகளில் ராகுலை டாப் ஆர்டரிலிருந்து இறக்கி ஐந்தாம் வரிசையில் இறக்குவது சரியான திட்டமாக இருக்கும் என நான் கருதவில்லை. ராகுல் - மயன்க் அகர்வால் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக இறக்கிவிட்டு, ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பிங் செய்ய சொல்வதுதான் சரியாக இருக்கும். ராகுல் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து. அவர் கீப்பிங் நன்றாக செய்கிறார். நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் ஒருநாள் போட்டியில் 50 ஓவர் அவரை கீப்பிங் செய்ய சொல்வது என்பது சரியாக இருக்காது" என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!