#AUSvsIND தேவையே இல்லாம அவரை ஏன் தூக்குனீங்க? இதுதான் இந்திய அணியின் பிரச்னை..! கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 25, 2020, 11:10 PM IST
Highlights

ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ரிதிமான் சஹாவை அணியிலிருந்து நீக்கியது சரியானதல்ல என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது.

முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, 2வது போட்டியில் சில மாற்றங்களை செய்துள்ளது. கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடிராத கோலி மற்றும் ஷமிக்கு பதிலாக ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பரை மாற்றிய விஷயத்தில் இந்திய அணி நிர்வாகத்துடன் கம்பீர் உடன்படவில்லை. இது தேவையில்லாத மாற்றம் என்று கருதுகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், ரிதிமான் சஹா ஒரேயொரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருவேளை அடுத்த போட்டியில் ரிஷப் பண்ட் சரியாக ஆடவில்லை என்றால், மீண்டும் சஹாவை எடுப்பீர்களா? இதனால் தான் இந்திய அணி செட்டில் ஆகாத அணியாக உள்ளது. இது ரிஷப் பண்ட் மற்றும் ரிதிமான் சஹா ஆகிய இருவருக்குமே இழைக்கப்படும் அநீதி இது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

click me!