அதுக்குள்ள கேட்டா எப்படிப்பா..? கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி

By karthikeyan VFirst Published Sep 18, 2019, 4:39 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி வர வேண்டும் என்று வலியுறுத்தி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார் கங்குலி.

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிந்த நிலையில், அதற்கிடையே புதிய பயிற்சியாளர்கள் தேர்வு நடைபெற்றது. 

ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங் ஆகியோரும் இந்த போட்டியில் இருந்தனர். ஆனால் நேர்காணலில் மற்றவர்களை விட சிறப்பாக செயல்பட்டதாலும் கம்யூனிகேஷன் திறன் நன்றாக இருந்ததாலும் ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

கங்குலி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக இருந்தன. ஆனால் கங்குலி இப்போதைக்கு ஐடியா இல்லை என்று ஒற்றை வார்த்தையில் விலகிக்கொண்டார். இந்திய கிரிக்கெட்டிற்கு கேப்டனாக மிகச்சிறந்த பங்களிப்பு செய்த கங்குலி, இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர். அந்தவகையில், அவர் பயிற்சியாளரானால் நன்றாக இருக்கும் என கருதியவர்கள்தான் அவரை விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தினர்.

கங்குலி இந்த முறை ஆர்வம் காட்டாத நிலையில், அடுத்த முறையாவது கங்குலி விண்ணப்பிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில், இதுகுறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கங்குலி, முதலில் இப்போது இருக்கும் பயிற்சியாளரின் பதவிக்காலம் முடியட்டும். அடுத்த பயிற்சியாளருக்கான தேர்வு நடைபெறும்போது அதை பார்த்துக்கொள்ளலாம். எப்படி பார்த்தாலும் நான் ஏற்கனவே பயிற்சியாளர் தான். ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கிறேன். டெல்லி அணியின் பயிற்சியாளராக முதல் சீசனே சிறப்பானதாக அமைந்தது. தற்போது நிறைய விஷயங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். ஐபிஎல்லில் டெல்லி அணியின் ஆலோசகர், பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவர், டிவி கமெண்ட்ரி என பல பணிகளை செய்துவருகிறேன். அதனால் இப்போதைக்கு முடியாது. ஆனால் கண்டிப்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு எதிர்காலத்தில் விண்ணப்பிப்பேன் என்று கங்குலி தெரிவித்தார். 
 

click me!