பும்ராவுக்கு பச்சைக்கொடி காட்டிய தாதா.. நிம்மதி பெருமூச்சு விட்ட பும்ரா

By karthikeyan VFirst Published Dec 26, 2019, 9:38 AM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்டிருந்த பும்ரா, ரஞ்சி போட்டியில் ஆடி உடற்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தார். 

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான பும்ரா, உலக கோப்பைக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய பும்ரா, அதன்பின்னர் காயம் காரணமாக, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் அண்மையில் நடந்த வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் ஆடவில்லை. 

கடந்த 3 மாதங்களாக சிகிச்சையும் பயிற்சியும் எடுத்துவந்த பும்ரா, சமீபத்தில் கடும் சிக்கலில் சிக்கினார். அதாவது இந்திய அணியில் இடம்பெறும் எந்த வீரராக இருந்தாலும் சரி, காயத்தால் இந்திய அணியிலிருந்து வெளியேறிய வீரர்களாக இருந்தாலும் சரி, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, அங்கிருந்து உடற்தகுதி சான்று பெற்றால்தான் இந்திய அணியில் இணைய முடியும்.

Also Read - பவுண்டரி லைனிலிருந்து த்ரோவையே பவுலிங் ஆக்‌ஷனில் துல்லியமா விட்ட ஆஸ்திரேலிய பவுலர்.. செம ரன் அவுட்.. வீடியோ

ஆனால் தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள், உடற்தகுதி நிபுணர்கள் ஆகியோரை நியமித்து பயிற்சியெடுத்த பும்ராவை, என்சிஏ-வில் இணைந்து பயிற்சி பெற்று உடற்தகுதியை நிரூபித்துவிட்டு சான்றை பெற்றுக்கொள்ளுமாறு என்சிஏ அறிவுறுத்தியது. ஆனால் என்சிஏ-வின் சான்றை பெறாமலேயே விசாகப்பட்டினத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் பந்துவீசினார் பும்ரா. 

Also Read - நாங்க நெனச்சது ஒண்ணு; ஆனால் நடந்தது ஒண்ணு.. ரிஷப் பண்ட் ரொம்ப சொதப்புறாரு.. அதிருப்தியை வெளிப்படுத்திய தேர்வுக்குழு தலைவர்

இதனால் கடுப்பான என்சிஏ நிர்வாகிகள், அவருக்கு உடற்தகுதி பரிசோதனை செய்ய முடியாது என மறுத்துவிட்டனர். என்சிஏ-வில் உடற்தகுதி சான்று பெற்றால்தான் இந்திய அணியில் இணைய முடியும். ஆனால் என்சிஏ பும்ராவிற்கு உடற்தகுதி டெஸ்ட்டே செய்யாத போதிலும், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றார். 

ஆனால், இலங்கை டி20 தொடருக்கு முன்பாக, ரஞ்சி தொடரில் கேரளா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியில் ஆடி, உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என தேர்வுக்குழு அறிவுறுத்தியது. அதுமட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு பும்ராவை 4-8 ஓவர்கள் வரை மட்டும் வீச வையுங்கள் என்று தெரிவித்தது. ஆனால் அதற்கு குஜராத் அணி நிர்வாகம் உடன்படவில்லை. ஒரு வீரரை அணியில் ஆடவைத்துவிட்டு, அவரை வெறும் 8 ஓவர்கள் மட்டுமே வீச வைக்க வேண்டுமென்றால் அது சாத்தியப்படாது. அதனால் குஜராத் அணி நிர்வாகம் தேர்வுக்குழுவின் கண்டிஷனுக்கு உடன்படவில்லை. 

Also Read - அடுத்த புரட்சிக்கு தயாரான தாதா.. ஐசிசி-யையே அலறவிடும் கங்குலி

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா ஆடுவதில் எந்த சிக்கலும் இல்லை. ரஞ்சியில் இப்போது ஆடவேண்டிய கட்டாயமில்லை. அவர் டி20 தொடரில் ஆடட்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21ம் தேதி தான் தொடங்குகிறது. அதற்கிடையே எந்த டெஸ்ட் போட்டியும் இல்லை. எனவே பும்ரா விஷயத்தில் அவசரப்பட வேண்டியதில்லை. டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசுவதால் எந்த பிரச்னையுமில்லை. நியூசிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக ரஞ்சி போட்டியில் ஆடினால் போதும் என்று கங்குலி தெரிவித்தார். 

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய தொடர்களுக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார். அடுத்ததாக, இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 
 

click me!