ஜடேஜாவிற்கு அனுமதி மறுத்த தாதா.. ஐபிஎல்லில் பணம் வருது, இதுல பணம் வரல அப்படித்தானே? பிசிசிஐ மீது கடும் விளாசல்

By karthikeyan VFirst Published Mar 6, 2020, 1:31 PM IST
Highlights

ரஞ்சி இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக ஜடேஜா ஆடுவதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி அனுமதியளிக்க மறுத்துவிட்டார். 
 

முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் இறுதி போட்டி வரும் 9ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடக்கவுள்ளது. ராஜ்கோட்டில் நடக்கும் இந்த இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணியும் பெங்கால் அணியும் மோதுகின்றன. 

ரஞ்சி இறுதி போட்டியில் ஆடுவதற்காக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரிதிமான் சஹா பெங்கால் அணியிலும், புஜாரா சவுராஷ்டிரா அணியிலும் ஆடுகின்றனர். ரஞ்சி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள சவுராஷ்டிரா அணி, அணியின் பலத்தை கூட்டும் நோக்கில் தங்கள் வீரரான ஜடேஜாவை அணியில் ஆடவைக்க நினைத்தது.

எனவே, இதுகுறித்து சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் ஜெய்தேவ் ஷா, பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் அனுமதி கோரியுள்ளார். ஜடேஜாவை ரஞ்சி இறுதி போட்டியில் ஆட அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளார் ஜெய்தேவ் ஷா. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஜடேஜா ஆட வேண்டும் என்பதால், ரஞ்சி இறுதி போட்டியில் ஆட அனுமதிக்க முடியாது என்று கங்குலி தெரிவித்துவிட்டதாக ஜெய்தேவ் ஷா தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்காக ஆடுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அதனால் ரஞ்சி ஃபைனலில் ஆடுவதை விட இந்திய அணிக்காக ஆடுவதுதான் முக்கியம் என்று கூறிவிட்டதாக ஷா தெரிவித்துள்ளார். 

ஆனால் ஜடேஜாவை ரஞ்சி ஃபைனலில் ஆட அனுமதிக்காதது குறித்தும் ரஞ்சி ஃபைனல் நடக்கும்போது, சர்வதேச போட்டியை நடத்துவதற்கும் அதிருப்தி தெரிவித்துள்ளார் ஜெய்தேவ் ஷா. 

Also Read - சுனில் ஜோஷி தேர்வின் பின்னணியில் தல தோனி..? வெளிவந்தது அதிரடி தகவல்

இதுகுறித்து பேசியுள்ள ஷா, உள்நாட்டு போட்டிகளை காண ரசிகர்கள் வர வேண்டும் என்று பிசிசிஐ நினைத்தால், ரஞ்சி இறுதி போட்டி நடக்கும் சமயத்தில் சர்வதேச போட்டியை நடத்தக்கூடாது. இது என்னுடைய கோரிக்கை. ஐபிஎல் நடக்கும்போது, பிசிசிஐ சர்வதேச போட்டியை நடத்துமா? கண்டிப்பாக நடத்தாது. ஏனெனில் பணம்.. ஐபிஎல்லில் பணம் கிடைக்கிறது. ரஞ்சி தொடர் பிரபலமாக வேண்டும் என்றால், இறுதி போட்டியிலாவது ஸ்டார் வீரர்களை ஆடவைக்க வேண்டும் என்று ஷா தெரிவித்துள்ளார். 
 

click me!