அவங்க 2 பேருமே தேவையில்ல.. ஆனால் அவரு கண்டிப்பா டீம்ல வேணும்!! காம்பீர் தேர்வு செய்த உலக கோப்பை அணி

By karthikeyan VFirst Published Mar 4, 2019, 10:09 AM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் 16 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

ரோஹித் சர்மா, தவான், கோலி, ராயுடு, கேதர், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்களும் உறுதி. மாற்று தொடக்க வீரராக கேஎல் ராகுல் அணியில் இணைவதும் உறுதி. 

மாற்று விக்கெட் கீப்பர் உட்பட இரண்டு இடங்களுக்கு யார் தேர்வாகப் போகிறார்கள் என்பதுதான் இன்னும் முடிவாகவில்லை. தோனி முதன்மை விக்கெட் கீப்பராக உள்ளார். ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ரிஷப் பண்ட் அணியில் யார் அணியில் எடுக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்படவில்லை. ரிஷப் பண்ட் தான் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் தினேஷ் கார்த்திக்கிற்கு உலக கோப்பை அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்தது தேர்வுக்குழு. 

அதேநேரத்தில் ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்படுவதும் உறுதியல்ல. தினேஷ் கார்த்திக்கை விட அவருக்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன, அவ்வளவுதான். உலக கோப்பைக்கு முன்பாக ரிஷப் பண்ட்டுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். கேப்டன் கோலியின் கூற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் கூறியதன் அடிப்படையில், ரிஷப் உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை பறைசாற்றியது.

ரிஷப் பண்ட் டி20 தொடரில் சரியாக ஆடவில்லை. அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தாலும், உலக கோப்பையில் ஆடுமளவிற்கு அனுபவமும் பக்குவமும் அவருக்கு போதாது என கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் 16 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அவர் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையுமே தேர்வு செய்யவில்லை. ஆனால் அஷ்வினை அணியில் எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே அஷ்வினை கண்டிப்பாக உலக கோப்பை அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

மேலும் விஜய் சங்கர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரையும் உலக கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகிய மூவரையும் ஆல்ரவுண்டராக தேர்வு செய்துள்ளார். மாற்று விக்கெட் கீப்பரே தேவையில்லை என்பது காம்பீரின் கருத்து. 

காம்பீர் தேர்வு செய்துள்ள 16 வீரர்களை கொண்ட இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராகுல், ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, அஷ்வின், குல்தீப், சாஹல், உமேஷ் யாதவ்.
 

click me!