விஜய் சங்கர், ரிஷப் பண்ட், ஜடேஜா இவங்கலாம் தேவையே கிடையாது!! உலக கோப்பைக்கு சூப்பர் டீமை தேர்வு செய்த காம்பீர்

By karthikeyan VFirst Published Apr 15, 2019, 11:59 AM IST
Highlights

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவிக்க உள்ள நிலையில், நல்ல கலவையிலான அனைத்து வகையிலும் சிறந்த அணியை காம்பீர் தேர்வு செய்துள்ளார்.

உலக கோப்பை  மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது. 

உலக கோப்பைக்கான அணியை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்படாமல் இருப்பதால், இந்த இடங்களுக்கு யார் தேர்வாகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

உலக கோப்பை அணி குறித்து பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவிப்பதோடு, அணியையும் தேர்வு செய்துவருகின்றனர். சேவாக், லட்சுமணன், சஞ்சய் மஞ்சரேக்கர் என பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பை அணியை தேர்வு செய்துவரும் நிலையில், கவுதம் காம்பீரும் 15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணியை தேர்வு செய்துள்ளார். 

நல்ல கலவையிலான அனைத்து வகையிலும் சிறந்த அணியை காம்பீர் தேர்வு செய்துள்ளார். மாற்று விக்கெட் கீப்பருக்கு அனைவரும் ரிஷப் பண்ட்டையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் தான் சரியான தேர்வாக இருப்பார் எனவும் சாம்சனை தேர்வு செய்தால் அவரை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்பதால் சாம்சனை தேர்வு செய்துள்ளார் காம்பீர். 

அதேபோல உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் நான்காவது ஃபாஸ்ட் பவுலர் தேவை என்பதால் நவ்தீப் சைனியை தேர்வு செய்துள்ளார். குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ள நிலையில் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினையும் தனது அணியில் சேர்த்துள்ளார் காம்பீர். காம்பீர் ஏற்கனவே பலமுறை அஷ்வினை உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

காம்பீர் தேர்வு செய்த உலக கோப்பைக்கான இந்திய அணி

கோலி(கேப்டன்), ரோஹித், தவான், ராகுல், சஞ்சு சாம்சன், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, ஷமி, அஷ்வின், நவ்தீப் சைனி.

விஜய் சங்கர், ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்யும் பொதுக்கருத்துடன் காம்பீர் உடன்படவில்லை. பொதுக்கருத்துடன் உடன்படவில்லை என்பதற்காக காம்பீரை பாராட்டுவதோ விமர்சிப்பதோ சரியாக இருக்காது. ஆனால் காம்பீர் தேர்வு செய்துள்ள அணி, அனைத்து அம்சத்தையும் உள்ளடக்கிய மிகச்சிறந்த கலவையிலான அணி. மாற்று விக்கெட் கீப்பர் மட்டுமல்லாமல் நான்காம் வரிசை வீரராகவும் கூட சஞ்சு சாம்சனை காம்பீர் தேர்வு செய்திருப்பது நல்ல தேர்வு. அதுமட்டுமல்லாமல் சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் அணியில் இருப்பது கூடுதல் பலம். 
 

click me!