ஐபிஎல் தகுதிச்சுற்றில் இந்த 4 அணிகள் தான் மோதும்!! காம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 19, 2019, 11:35 AM IST
Highlights

கிரிக்கெட் ஆடும் பல நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும் உலகின் மிகப்பெரிய டி20 லீக் திருவிழாவாக திகழ்வது ஐபிஎல் தான். ஐபிஎல் நடக்கும் இரண்டரை மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். 
 

ஐபிஎல்லில் 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. 

கிரிக்கெட் ஆடும் பல நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும் உலகின் மிகப்பெரிய டி20 லீக் திருவிழாவாக திகழ்வது ஐபிஎல் தான். ஐபிஎல் நடக்கும் இரண்டரை மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். 

இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களை காட்டிலும் இந்த சீசன் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் வாணவேடிக்கை நிறைந்ததாகவும் திகழும். ஏனெனில் உலக கோப்பைக்கு முன் இந்த சீசன் நடப்பதால் உலக கோப்பை அணியில் இணையும் தீவிரத்தில் இருக்கும் வீரர்கள் தங்களது முழு திறமையையும் காட்ட முனைவார்கள். அதேபோல தடை முடிந்து வந்துள்ள ஸ்மித் மற்றும் வார்னரின் வாணவேடிக்கையும் நிகழும். அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு இது ஒரு பயிற்சி மாதிரி அமைந்துவிட்டதால் அனைத்து வீரர்களுமே முடிந்தளவிற்கு இந்த சீசனில் அடித்து நல்ல ஃபார்முடன் உலக கோப்பைக்கு செல்வதற்குத்தான் விரும்புவர். 

ஐபிஎல்லின் வெற்றிகரமாக அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் திகழ்கின்றன. இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. இவற்றிற்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. 

கோலி தலைமையிலான ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்த மூன்று அணிகளும் இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. 

அதேவேளையில், வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளும் கூட, மீண்டும் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளன. ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

இந்நிலையில், இந்த சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என காம்பீர் கணித்துள்ளார். ஐபிஎல்லை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் குறித்த விவாதத்தில் இதுகுறித்து பேசிய காம்பீர், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என காம்பீர் தெரிவித்தார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு காம்பீர் இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!