உலக கோப்பைக்கு அவங்க 2 பேருமே தேவையில்ல!! உறுதியா அவங்கள ஓரங்கட்டிட்டு ஆகுற வேலைய பாருங்க

By karthikeyan VFirst Published Mar 19, 2019, 10:35 AM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஓரளவிற்கு அணி உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், பேட்டிங் ஆர்டரில் முக்கியமான 4ம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 4ம் வரிசை வீரர் இதுவரை உறுதி செய்யப்படாமல் இருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 4ம் வரிசை மட்டும்தான் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அது மிகவும் முக்கியமான இடம் என்பதால் அந்த வரிசையில் சிறந்த வீரரை உறுதி செய்வது அவசியம்.

4ம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி உட்பட ஏராளமான வீரர்களை களமிறக்கி பரிசோதித்த இந்திய அணி, ஒருவழியாக ராயுடுவை உறுதி செய்தது. ராயுடுவும் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய தொடர்களில் நன்றாக ஆடினார். இதையடுத்து ராயுடுதான் உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அண்மையில் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராயுடு சோபிக்கத்தவறினார். முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.

3 போட்டிகளில் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ராயுடு அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடுவின் நீக்கம், 4ம் வரிசைக்கு வேறு வீரரை இந்திய அணி தேடுகிறது என்ற தகவலை உணர்த்துவதாக அமைந்தது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் 4ம் வரிசை வீரர் உறுதி செய்யப்படாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

ராயுடு சொதப்பிய அதேவேளையில் மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார். எனவே அவரைக்கூட நான்காம் வரிசையில் இறக்கலாம். அப்படி செய்தால் ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும். இந்த கருத்தைத்தான் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் தெரிவித்துள்ளார். உலக கோப்பைக்கான அணியை பல முன்னாள் வீரர்களும் தேர்வு செய்துவரும் நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கரும் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ராயுடுவை சேர்க்கவே இல்லை. நான்காம் வரிசையில் விஜய் சங்கரை இறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

நான்காம் வரிசையில் விஜய் சங்கரையும் ஐந்தாம் வரிசையில் கேதர் ஜாதவையும் இறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல இன்னும் உறுதி செய்யப்படாத மாற்று விக்கெட் கீப்பருக்கான இடத்தை ரிஷப் பண்ட்டிற்கு வழங்கியுள்ளார் மஞ்சரேக்கர். தினேஷ் கார்த்திக் சீனியர் வீரராக இருந்தபோதிலும், ரிஷப் பண்ட்டையே உலக கோப்பைக்கு தேர்வு செய்துள்ளார் மஞ்சரேக்கர். 

மாற்று தொடக்க வீரராக ராகுலை தேர்வு செய்துள்ள மஞ்சரேக்கர், 15 பேர் கொண்ட அணியில் ஜடேஜாவையும் சேர்த்துள்ளார். 

மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ள உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), விஜய் சங்கர், கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப், சாஹல், ஷமி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா.

ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையுமே மஞ்சரேக்கர் தேர்வு செய்யவில்லை. 
 

click me!