பாக்., வீரர்களுக்கு வலைவிரித்த இந்தியா!மனைவிகளை அனுப்பி காப்பாற்றியதாக சப்பை கட்டு கட்டும் PCB முன்னாள் தலைவர்

Published : Apr 15, 2022, 04:04 PM IST
பாக்., வீரர்களுக்கு வலைவிரித்த இந்தியா!மனைவிகளை அனுப்பி காப்பாற்றியதாக சப்பை கட்டு கட்டும் PCB முன்னாள் தலைவர்

சுருக்கம்

2012ல் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்தபோது பாகிஸ்தான் வீரர்களுடன் அவர்களது மனைவிகளை அனுப்பிவைத்ததற்கு புதிதாக சப்பை கட்டு கட்டியுள்ளார், அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரஃப்.  

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல்பறக்கும். இருநாட்டு வீரர்களும் வெற்றிக்காக வெறித்தனமாக போராடுவார்கள். இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். 

ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க ரீதியாக நல்லுறவு இல்லாததால், 2012ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடவேயில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடுகின்றன. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணி 2012ல் இந்தியாவிற்கு வந்தபோது, பாகிஸ்தான் வீரர்களுடன் அவர்களது மனைவிகளை அனுப்பிவைத்தது குறித்து விளக்கமளிக்கும் விதமாக, இந்தியா மீது அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரஃப்.

இதுகுறித்து பேசிய ஜாகா அஷ்ரஃப்,  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நான் இருந்த சமயத்தில், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது வீரர்களின் மனைவிகளை அவர்களுடன் அனுப்பிவைத்தோம். இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் பாகிஸ்தான் வீரர்களை ஒழுக்க ரீதியான விஷயங்களில் சிக்கவைத்து வீரர்களுக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் அவப்பெயரை உருவாக்க இந்தியா நினைக்கும். இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் வீரர்கள் குறித்த சர்ச்சை செய்திகளுக்காக காத்திருப்பார்கள். அதனால் தான் வீரர்களை அவர்கள் கூடவே இருந்து கண்காணிப்பதற்காக பாகிஸ்தான் வீரர்களுடன் அவர்களது மனைவி அனுப்பிவைக்கப்பட்டதாக ஜாகா அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி